ரகுராம் ராஜன் மறுநியமனம் ஊடக விவகாரமல்ல: பிரதமர் மோடி கருத்து
ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் மீண்டும் நியமிக்கப்படுவது நிர்வாகம் தொடர்பான விவகாரமே என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜனை மீண்டும் தேர்வு செய்வதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்று வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கேள்வி எழுப்பியது.
இதற்குப் பதில் அளித்த பிரதமர் மோடி, “நிர்வாகம் தொடர்பான இந்த விவகாரம் ஊடகத்தின் ஆர்வம் சார்ந்த விவகாரம் என்று நான் கருதவில்லை. மேலும் அவரது பதவிக்காலம் செப்டம்பர் வரை உள்ளது” என்றார்.
பொருளாதாரம் பற்றிய விவகாரங்கள் பொதுவாக பொதுவெளியில் புரியாத பரிபாஷையில் வெளியிடப்படும், ஆனால் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அதன் நுட்பங்களை வெளிப்படையாக ஊடகங்களுக்குத் தெரிவித்து வருகிறார், நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமைகளை எடுத்து வைக்கிறார்.
இதற்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு 2 கடிதங்கள் எழுதியுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி இது நிர்வாகம் தொடர்பான விஷயம் ஊடக ஆர்வம் சார்ந்ததல்ல என்று கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.