அயல் நாடுகளில் 5வது செஞ்சுரியை அடித்தார் ரகானே.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரகானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 237 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர்களுடன் அவர் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
28 வயதான ரகானேக்கு இது 7-வது சதமாகும். 2013-ம் ஆண்டு அறிமுகமான அவர் வெளிநாட்டு மைதானத்தில் தனது 5-வது சதத்தை பதிவு செய்தார்.
வெளிநாட்டில் ரகானே அடித்த 5 சதங்கள் விவரம்:-
நியூசிலாந்து – 118 (பிப்ரிவரி 2014)
இங்கிலாந்து – 103 (ஜூலை 2014)
ஆஸ்திரேலியா – 147 (டிசம்பர் 2014)
இலங்கை – 126 ( ஆகஸ்டு 2015)
வெஸ்ட் இண்டீஸ் – 108 (ஆகஸ்டு 2016)
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.