Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Rahul Gandhi takes 4 days election tour in Tamilnadu

By   /  April 20, 2016  /  Comments Off on Rahul Gandhi takes 4 days election tour in Tamilnadu

    Print       Email

நான்கு நாட்களுக்குத் தேர்தல் பிரச்சாரம் ; தமிழகத்தில் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.

New Delhi: A file photo of Congress Vice President Rahul Gandhi who has gone on a few weeks leave to reflect upon recent events and future course of the party. PTI Photo (PTI2_23_2015_000157B)

InCorpTaxAct
Suvidha

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் சேலத்தில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்னும் 2 நாட்களில் பிரசாரத்தை தொடங்க உள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் ஊர், ஊராக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜனதாவும் இன்னமும் தேர்தல் பிரசாரத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தவில்லை. டெல்லி தலைவர்களை அழைத்து வந்து, தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்த காங்கிரஸ், பா.ஜ.க. மாநில தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

காங்கிரசில் சோனியா, ராகுல் இருவரது வருகையையும் எதிர்பார்த்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் காத்திருக்கிறார்கள். சோனியா, ராகுல் இருவரையும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் முயற்சிகளில் இளங்கோவன் ஈடுபட்டுள்ளார்.
மொத்தம் 3 அல்லது 4 நாட்கள் ராகுல்காந்தி தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார். அடுத்த வார இறுதியில் அவர் தமிழகம் வர வாய்ப்புள்ளது. இல்லையெனில் மே மாதம் முதல் வாரம் அவர் வருவார்.

ராகுல் தினமும் ஏதாவது ஒரு ஊரில் பொதுக்கூட்டத்தில் பேசுவார். மற்றபடி அவர் முக்கிய வழித்தடங்களில் ‘ரோடு-ஷோ’ நடத்தி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார். ராகுல் நடத்தும் ரோடு-ஷோ பிரசாரம் காங்கிரசுக்கு மிகப் பெரும் எழுச்சியை பெற்றுக் கொடுக்கும் என்று காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆவலுடன் உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தமிழ்நாட்டில் ஒரே ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்ய உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் அவர் ஒரே மேடையில் பேச திட்டமிட்டுள்ளார்.

இதற்கான பொதுக்கூட்டம் சென்னை அல்லது புறநகரில் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. அனேகமாக மே மாதம் 5-ந் தேதி சோனியா-கருணாநிதி பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →