ராஜஸ்தான் எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் எம்எல்ஏ மகன் ஓட்டி வந்ததாக கூறப்படும் கார் மோதியதில் 3 பேர் இறந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நந்த கிஷோர் மஹரியா. இவரது மகன் சித்தார்த் மஹரியா. சித்தார்த் நேற்று அதிகாலை 1.30 மணியவில் ஜெய்ப்பூரின் ஜலுபுரா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் வந்துகொண்டிருந்தார். காரில் அவரது உறவினர் ஜெயந்த் மற்றும் இருவர் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சி-ஸ்கீம் என்ற இடத்தில் வேகமாக வந்த அவரது கார் எதிரில் வந்த ஆட்டோ மீதும் இதையடுத்து போலீஸ் ரோந்து வாகனம் மீதும் மோதியது.
இதில் ஆட்டோவில் இருந்த இருவர் சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் இறந்தனர். ஆட்டோவில் இருந்த மேலும் ஒருவர் காயம் அடைந்தார். ஆட்டோவை தொடர்ந்து அந்த கார், போலீஸ் ரோந்து வாகனம் மீது மோதியதில் ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீஸார் காயம் அடைந்தனர்.
காயமடைந்த 5 பேரும் எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறை உதவி ஆணையர் (ஜெய்ப்பூர் தெற்கு) மனீஷ் அகர்வால் கூறும்போது, “கார் மோதியதில் ஆட்டோ 200 அடி தொலைவுக்கு வீசப்பட்டுள்ளது. காரில் இருந்த சித்தார்த், ஜெயந்த் மட்டுமே பிடிபட்டனர். இவர்களில் விபத்து ஏற்படுத்தியதாக சித்தார்த் கைது செய்யப்பட்டார்” என்றார்.
காவல்துறை கூடுதல் உதவி ஆணையர் யோகேஷ் கோயல் கூறும்போது, “விபத்தின்போது சித்தார்த் போதையில் இருந்ததற் கான முகாந்திரம் உள்ளது. இதை உறுதிப்படுத்துவதற்காக மருத் துவப் பரிசோதனை மேற்கொள் ளப்பட்டுள்ளது” என்றார்.
இதனிடையே சித்தார்த், தான் கார் ஓட்டி வந்ததாக கூறப்படுவதை மறுத்துள்ளார். மேலும் விபத்தின்போது மது அருந்தியிருந்ததாக கூறப்படு வதையும் அவர் மறுத்துள்ளார்.
இதனிடையே விபத்தில் இறந்தவர்களில் ஜெத்தமல் (40) என்ற ஒருவர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.