Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Rajini Murugan success meet, Siva karthikeyan refused?

By   /  February 7, 2016  /  Comments Off on Rajini Murugan success meet, Siva karthikeyan refused?

    Print       Email

‘Rajini-Murugan’-Postponed-Yet-Again-Due-To-Heavy-Rainரஜினி முருகன் வெற்றிவிழா –சிவகார்த்திகேயன் மறுப்பு?

லிங்குசாமி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கும் தயாரிப்பாளர் தரப்பினருக்கும் முட்டல் மோதல் இருந்து வந்ததாக செய்திகள் பரவின.

InCorpTaxAct
Suvidha

அந்தப் படம் வெளியானதும் சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில் “பல லட்சங்களை இழந்துதான் என்னுடைய இந்தப் படம் வெளியாகியிருக்கிறது” என்றே குறிப்பிட்டார்.

பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே வசூலில் வெற்றியைக் குவித்த படம் இதுதான் என்று ஒரு செய்தியும், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளியான படங்களிலேயே அதிக வசூலை குவித்துக்கொண்டிருக்கும் படம் இதுதானென்றும் மாறி மாறி செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இது பற்றிய தகவல்கள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற தளங்களில்தான் பகிரப்படுகின்றனவே தவிர நேரடியாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்தோ, கதாநாயகன் தரப்பிலிருந்தோ எந்தச் செய்தியும் அதிகாரபூர்வமாக வெளியிடப் படவில்லை.

இது ஒருபுறமிருக்க இந்தப் படத்தின் வெற்றியை அறிவிக்கும் முகமாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதென்றும் அதில் தயாரிப்பாளர் லிங்குசாமி, ஹீரோ சிவகார்த்திகேயன் எல்லாரும் பங்கு கொள்வதாக முடிவு செய்யப்பட்டதென்றும் ஒரு செய்தி. அதற்கு கதாநாயகர் சார்பில் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இதுவரை பட்டதெல்லாம் போதும். எதுவாக இருந்தாலும் நான் வரமாட்டேன் என்று சொல்லப்பட்டுவிட்டதாகவும் ஒரு செய்தி காற்றில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

வெற்றிகள் எல்லா மனக்காயங்களையும் ஆற்றிவிடும் என்று சொல்வார்கள். இந்தப் பட விஷயத்தில் என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →