Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Rajini will provide ‘Kamaraj’s rule’.-says Tamilaruvi Manian.

By   /  January 2, 2018  /  Comments Off on Rajini will provide ‘Kamaraj’s rule’.-says Tamilaruvi Manian.

    Print       Email

காமராஜர் ஆட்சியை ரஜினி தருவார் – தமிழருவி மணியன் நம்பிக்கை.

 

Suvidha
Biryani Pot

 

 

 

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை உறுதி செய்த நிலையில் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடந்த நிகழ்ச்ச்சி ஒன்றில் தமிழருவி மணியன் கலந்து கொண்டார்.

பின்னர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரவி வீட்டிற்கு சென்று ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எல்லா இடங்களிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். ஒவ்வொரு ரஜினி ரசிகரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கூறினார்.

பின்னர் தமிழருவி மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- திறமையான, தகுதிமிக்க, நல்லொழுக்க முள்ளவர்களை பொறுப்பில் அமர்த்தி அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்கும் கண்காணிப்பாளனாக நான் இருப்பேன் என ரஜினிகாந்த் கூறியது போல் வேறு யாராவது கூறியுள்ளார்களா.

ஜெயலலிதா இருந்த வரையில் வாயே திறக்காத அமைச்சர்கள் இன்று திசைகள் தோறும் திருவாய் திறக்கிறார்கள்.

3 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று தினகரன் கூறி வருகிறார். எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று தெரிய வில்லை. .தி.மு. . வினர் அனைவருக்கும் என்ன லட்சியம் உள்ளது.

அவர்களுடைய நோக்கம் ஒன்றுதான் எப்படியாவது பதவிக்கு வரவேண்டும்.பெற்ற பதவியை வைத்து பணம் சேர்ப்பது. பணத்தை வைத்து தேர்தலில் பணம் கொடுத்து மீண்டும் பதவியை பெறுவது மட்டுமே இவர்களின் நோக்கம்.

ரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்ட ஆன்மிக அரசியலை கொடுப்பார். ரஜினிகாந்த் மூலம் தான் காமராஜரின் ஆட்சியை தமிழக மக்கள் தரிசிக்க முடியும்.

Charter Global
InCorpTaxAct
Swapna

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

TAMA Sankranti Event… Some records were broken. Few new ones set!

Read More →