Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Rajinikanth, Balakrishna, Mohanlal, Attend Stunt Union’s Golden Jubilee Celebrations; Sivakumar Donates Rs 10 Lakh

By   /  August 27, 2017  /  Comments Off on Rajinikanth, Balakrishna, Mohanlal, Attend Stunt Union’s Golden Jubilee Celebrations; Sivakumar Donates Rs 10 Lakh

    Print       Email

குழந்தைகளை வளர்ப்பதிலும், படிக்க வைப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும்: சண்டைக் கலைஞர்களுக்கு ரஜினி வேண்டுகோள்

குழந்தைகளை வளர்ப்பதிலும், படிக்க வைப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும் என்று சண்டைக் கலைஞர்களுக்கு ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

தென்னிந்திய சினிமா மற்றும் டிவி ஸ்டண்ட் கலைஞர்கள் பொன்விழா (1966 – 2017) நிகழ்ச்சி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, இயக்குநர்கள் எஸ்பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், பி.வாசு, ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜீவா, விக்ரம்பிரபு, விவேக்,ஆர்யா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் ஸ்டண்ட் கலைஞர்கள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது :

சிறு வயதில் படம் பார்க்கும்போது இந்தப் படத்தில் எத்தனை சண்டைக் காட்சி இருக்கிறது என்றுதான் முதலில் கேட்பேன். ஒரு படத்துக்கு தயாரிப்பாளர், இயக்குநர் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு சண்டைப் பயிற்சியாளரும், சண்டைக் கலைஞர்களும் முக்கியம். ஹாலிவுட் தொடங்கி பாலிவுட், கோலிவுட் வரைக்கும் ஆக்‌ஷன் படங்கள்தான் அதிக வசூலை பெற்றுத் தருகிறது.

பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கிறது. சிலர் பணத்தையே மூலதனமாக வைத்து பணம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். அந்த வகையில் உடம்பை மூலதனமாக வைத்து பணம் சம்பாதிக்கக்கூடிய தொழில் ஸ்டண்ட் கலைஞர்கள் தொழில். எம்.ஜி.ஆர் தொடங்கி வைக்கப்பட்ட இந்த யூனியனின் பொன் விழாவை அவரது நூற்றாண்டின்போது கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எம்ஜிஆர் சினிமாவை விட்டு விலகியபோது கூட சண்டை கலைஞர்கள் பலருக்கு மாத சம்பளம் கொடுத்து உதவினார். ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னைக் கேளுங்கள். உங்களுக்காக என் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும்.

சினிமாவில் எல்லோரும் வியர்வை சிந்தி உழைக்கிறார்கள். சண்டைக் கலைஞர்கள்தான் வியர்வையுடன் ரத்தத்தை சிந்தி உழைக்கிறார்கள். உயிரைப் பணயம் வைக்கிறார்கள். சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது காட்டும் அக்கறையை சண்டைக் கலைஞர்கள் குழந்தைகளை வளர்ப்பதிலும், படிக்க வைப்பதிலும் காட்ட வேண்டும்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

விழாவில் மூத்த ஸ்டண்ட் கலைஞர்கள் கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள். படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர்களின் குடும்பத்தினருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. விழாவில் ஸ்டண்ட் யூனியன் சார்பில் பொன்விழா மலர் வெளியிடப்பட்டது. ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் காசோலையை சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரும் வழங்கினர்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →