Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Rajini’s intro became viral in internet, shocks  Kabali team.

By   /  July 21, 2016  /  Comments Off on Rajini’s intro became viral in internet, shocks  Kabali team.

    Print       Email

‘கபாலி’ படத்தில் இடம்பெறும் ரஜினியின் கதாபாத்திரம் அறிமுகக் காட்சி இணையத்தில் கசிந்ததால் படக்குழு கடும் அதிர்ச்சி380

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.

InCorpTaxAct
Suvidha

உலகமெங்கும் நாளை (ஜூலை 22) இப்படம் வெளியாக இருக்கிறது. டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு அனைத்து திரையரங்குகளிலும் முதல் வாரத்துக்கான விற்பனை முடிவுற்று இருக்கிறது. ரசிகர்கள் பலரும் டிக்கெட் கிடைக்காமலும், டிக்கெட் விலை அதிகமானதாலும் தங்களுடைய ஆதங்கத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

இதனிடையே, அமெரிக்காவில் விநியோகஸ்தர்களுக்காக சிறப்பு ‘கபாலி’ காட்சி திரையிடப்பட்டது. இதில் ரஜினி கலந்து கொண்டார்.

இந்த நிலையில், கபாலி படத்தில் ரஜினி கதாபாத்திரம் அறிமுகக் காட்சி இணையத்தில் கசிந்தது. சமூக வலைத்தளம் மட்டுமன்றி வாட்ஸ் – அப்பிலும் இந்த இரண்டு நிமிடக் காட்சி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் படக்குழு கடும் அதிர்ச்சியில் இருக்கிறது.

இக்காட்சி குறித்து தயாரிப்பாளர் தாணு கூறும்போது, “தலைவர் அறிமுகக் காட்சியை போனிலோ, கம்ப்யூட்டரிலோ பார்த்தால் உங்களுக்கு மெய்சிலிர்க்கும் அனுபவம் ஏற்படாது. அந்தக் காட்சியை கசிய விட்டவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, படத்தை வெள்ளிக்கிழமை திரையரங்கில் காண்போம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், பல்வேறு தமிழ் திரையுலகினரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்கள்.

திருட்டு விசிடியை தடுப்பதற்காக டெல்லி வரை சென்று மனுக்கள் எல்லாம் அளித்தும், ‘கபாலி’ அறிமுக காட்சி இணையத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, திருட்டு விசிடி இணையதளங்கள் மற்றும் டாரன்ட் வழியில் படத்தை வெளியிடும் இணையங்களுமே ‘கபாலி’ நாளை வெளியாகும் என சமூக வலைதளங்களில் பகிரங்கமாக அறிவித்திருப்பதும் தமிழ் திரையுலகுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →