Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Rajiv  case  convict  Nalini  granted  one  day  parole.

By   /  March 8, 2016  /  Comments Off on Rajiv  case  convict  Nalini  granted  one  day  parole.

    Print       Email

தந்தையின் ஈமச்சடங்கில் பங்கேற்க நளினிக்கு ஒரு நாள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.140294-nalini540

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ளார். நளினியின் தந்தை சங்கர நாராயணன் உயிரிழந்த 16-ம் நாள் காரிய நிகழ்வு சென்னையில் நடைபெற உள்ளது.

InCorpTaxAct
Suvidha

எனவே, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்று முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் பரோல் கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு கொடுத்துள்ளார். நளினி சார்பில் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று மனுவை தாக்கல் செய்தார்.

இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீபதிகள் நளினிக்கு ஒருநாள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். 3 நாள் பரோலுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு நாள் பரோல் தரப்பட்டுள்ளது

இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை பரோலில் செல்ல நளினிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இதனிடையே, அரசியலமைப்புச் சட்ட 161-வது பிரிவைப் பயன்படுத்த, தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்படுத்தாது என்பதால் அந்த பிரிவைப் பயன்படுத்தி மத்திய அரசு அனுமதி கொடுத்தால் விரைவில் நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →