மத்திய அரசு கால அவகாசம் கேட்டதால் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிப்பது சம்பந்தமான வழக்கு ஒத்திவைப்பு.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்ததோடு, 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இதற்கு எதிராக மனு தாக்கல் செய்ததால் சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்தது.
ராஜீவ் கொலைக்கைதிகள் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது 3 நீதிபதிகள் அமர்வு வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விசாரிக்கும் என்று ஏப்ரல் 18-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், அருண் மிஸ்ரா, பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெறுவதாக இருந்தது.
மத்திய அரசு சார்பில் தங்கள் தரப்புக்கு மேலும் 4 வாரகால அவகாசம் தேவை என்று கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு நேற்று நடைபெறுவதாக இருந்த விசாரணை ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை கோடை விடுமுறைக்கு பிறகு நடைபெறும் என்று தெரிகிறது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.