ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும, முருகனின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள பேரறிவாளன் சிறுநீரக தொற்று, முதுகு வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். அவரை சிறைத்துறை அதிகாரிகள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. பின்னர் அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதையடுத்து அவ்வப்போது சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை போலீசார் அழைத்து சென்று வத்தறனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் பேரறிவாளனுக்கு சீறுநீரக தொற்று மற்றும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக பேரறிவாளன் மத்திய சிறையில் இருந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு தனி வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டர். மருத்துவமனையில் பேரறிவளனுக்கு இருதயம்,சிறுநீரகம், ரத்தம் உள்ளிட்ட முழுபரிசோதனையும் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது பின்னர் மருத்துவமனையில் இருத்து பலத்த போலீஸ் காவலுடன் பேரறிவாளன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.