Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Rajnikanth is safe and fine. Don’t believe rumors – says Rajni’s PRO.

By   /  June 16, 2016  /  Comments Off on Rajnikanth is safe and fine. Don’t believe rumors – says Rajni’s PRO.

    Print       Email

rajinikanth-hospitalizedரஜினிகாந்த் நலமுடன் உள்ளார்; அமெரிக்காவில் உள்ளார், வதந்திகளை நம்பாதீர் –ரஜினி பிஆர்ஓ அறிவிப்பு.  

டிகர் ரஜினிகாந்த், கபாலி படத்தின்  படப்பிடிப்பு முடிவடைந்ததால் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்று ஓய்வெடுத்து வருகிறார்.  அங்கே அவர் சிகிச்சைபெற்று வருகிறார் என்றொரு தகவலும் பரவி வந்தது.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில் கடந்த சில தினங்களூக்கு முன்பு கபாலி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.  ரஜினி இல்லாமல் இவ்விழா நடைபெற்றதாலும், அமெரிக்க பயணத்தை ஒருவாரம் அதிகப்படுத்தியிருப்பதாலும் இன்று காலையில் ரஜினியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.  இலங்கை இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தியை அடுத்தே சமூக வலைதளங்களில் இந்த அதிர்ச்சி வதந்தி பரவியது.  இதனால் ரஜினி ரசிகர்கள் பதட்டமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

இதனையடுத்து ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ. ரியாஸ், ‘’ரஜினி சார் தற்போது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் இருக்கிறார்.   இங்கே பரவும் வதந்தி குறித்து தகவல் தெரிவித்திருக்கிறேன்.  அமெரிக்காவில் இப்போது இரவு நேரம் ஆகும்.   காலையில் எழுந்ததும் ரஜினி சாரே டுவிட்டரில் இது குறித்து பதிவு செய்ய உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்’’ என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் பற்றிய செய்திகளை நம்பவேண்டாம் என்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் குடும்பத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக, இன்றிரவு 8 மணிக்கு கபாலி படத்தின் அடுத்த டீசர் வெளியிடப்படுகிறது என்று  இத்தகவலை தயாரிப்பாளர் தாணு, ட்விட்டர் வழியாகத் தெரிவித்துள்ளார். ‘கபாலி படத்தின் பாடல் டீசரை இன்றிரவு 8 மணிக்கு வெளியிடுகிறேன். அது நிச்சயம் தலைவர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

ரஜினியின் உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பிய அந்த இலங்கைத்தமிழரும், இணையதளமும் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும்,  இது குறித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →