Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Rajnikanth  refused  to talk  politics.

By   /  February 16, 2016  /  Comments Off on Rajnikanth  refused  to talk  politics.

    Print       Email

சட்டமன்றத் தேர்தல் பற்றிக் கருத்துச் சொல்ல ரஜினிகாந்த் மறுப்பு.rajinikanth_resoze_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு மத்திய அரசு கலைத்துறை சேவைக்கான மிக உயரிய பத்ம விபூஷன் விருது வழங்கியது.

InCorpTaxAct
Suvidha

இது அவரை பா.ஜனதாவுக்கு ஆதரவாக இழுக்கும் முயற்சி என்று கூறப்பட்டது. ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்று சந்தித்தார். அப்போது மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கு என்பதை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் ரஜினிகாந்த் ‘கபாலி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் நேற்று இரவு 11.15 மணிக்கு விமானத்தில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை நிருபர்கள் சந்தித்தனர்.

அப்போது அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அதற்கு ரஜினிகாந்த் கூறியதாவது:–

எனக்கு பத்மவிபூஷன் விருது அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசுக்கு நன்றி. இது எனக்கு கால தாமதமாக கிடைத்ததாக நான் கருதவில்லை. தமிழக கலைஞர்களுக்கு மத்திய அரசு விருது வழங்குவதில் புறக்கணிப்பதாக நான் கருதவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் வர இருக்கிற தமிழக சட்டசபை தேர்தல் குறித்து கருத்து கேட்டதற்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →