Loading...
You are here:  Home  >  Politics  >  Andhra Politics  >  Current Article

Rajyasabha poll ends: BJP managed to make some gains, still lagging for majority.

By   /  June 12, 2016  /  Comments Off on Rajyasabha poll ends: BJP managed to make some gains, still lagging for majority.

    Print       Email

201606121638306599_Rajya-Sabha-polls-BJP-gains-edge-in-Upper-House-but-still_SECVPFராஜ்யசபா தேர்தல் முடிவுக்கு வந்தது. பாஜகவுக்குக் கூடுதல் இடங்கள் கிடைத்தபோதும் பெரும்பான்மை சிக்கல் தொடர்கிறது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியான 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 30 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.

InCorpTaxAct
Suvidha

அதையடுத்து, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 7 மாநிலங்களில் மீதமுள்ள 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

27 இடங்களில் பா.ஜ.க. 12 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ், பா.ஜ.க அல்லாமல், ஐக்கிய ஜனதா தளம்(2), ராஷ்ட்ரிய ஜனதா தளம்(2), அ.தி.மு.க.(4), தி.மு.க.(2), பிஜூ ஜனதா தளம்(3) உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்தலுக்கு பிறகு மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 74-ஆக உயர்ந்துள்ளது. இந்த தேர்தலில் அந்த கூட்டணிக்கு 5 உறுப்பினர்கள் கூடுதலாக கிடைத்தனர்.

அதேபோல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் எண்ணிக்கை 71-ஆக குறைந்துள்ளது. 3 உறுப்பினர்கள் குறைந்துள்ளனர்.

இந்த தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், பெரும்பான்மை பெறுவதற்கு இன்னும் நிறைய உறுப்பினர்கள் அக்கட்சிக்கு தேவைப்படுகிறது. இதனால் பெரும்பான்மை சிக்கல் நீடிக்கிறது.

மொத்தமுள்ள 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் காங்கிரஸ், பா.ஜ.க அல்லாமல் பிராந்திய கட்சிகள் தற்போது 89 உறுப்பினர்களை கொண்டுள்ளன. அதில், சமாஜ்வாடி கட்சி அதிகபட்சமாக 19 உறுப்பினர்களை தங்கள் வசம் வைத்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் மொத்தம் 12 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. தலா 12 உறுப்பினர்களை வைத்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக பகுஜன் சமாஜ்(6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (8), பிஜூ ஜனதா தளம் கட்சி(7), தி.மு.க.(5) உறுப்பினர்களை கொண்டுள்ளன. –அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →