Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Rape case against actor Dileep.

By   /  July 12, 2017  /  Comments Off on Rape case against actor Dileep.

    Print       Email

நடிகர் திலீப் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு 20 ஆண்டுகள் தண்டனைக்கு வாய்ப்பு?

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17–ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழி மறித்து கடத்தப்பட்டார். காரில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இச்சம்பவம், கேரளாவையே உலுக்கியது. அடுத்த ஓரிரு நாளில், குற்றச்செயல் நடந்த காரின் டிரைவர் மார்ட்டின் அந்தோணி என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் பல்சர் சுனில் என்பவனை பற்றியும், அவனுடைய கூட்டாளிகளை பற்றியும் தெரிவித்தான். இதையடுத்து, பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

InCorpTaxAct
Suvidha

இச்சம்பவத்தின் சதி பின்னணியை கண்டறிய ஐ.ஜி. தினேந்திர காஷ்யப் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சந்தியா, வழக்கின் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், பிரபல மலையாள கதாநாயகன் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வந்தது. ஆனால், அவர் அதை மறுத்து வந்தார். பல்சர் சுனிலை தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். இந்நிலையில், திடீர் திருப்பமாக, நடிகர் திலீப் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.

நடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பாவனா மீது கொண்ட தனிப்பட்ட பகையே திலீப்பின் சதித்திட்டத்துக்கு காரணம் என்றும் அவர்கள் கூறினர். திலீப் அங்கமாலி  கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டு உள்ளார். நேற்று கொச்சியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலுவா துணை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கபட்டார்.

நடிகர் திலீப்புக்கு எதிராக  போலீசார் 19  முக்கிய ஆதாரங்களை கண்டு பிடித்து உள்ளனர். இந்த வழக்கில்  முதல் குற்றவாளியாக பல்சர் சுனிலும் 2 வது குற்றவாளியாக நடிகர் திலிப்பும்  சேர்க்கப்பட்டு உள்ளனர். திலீபுக்கு  எதிராக சதி மற்றும் கற்பழிப்பு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை போலீசார் பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில்  பாவனா விவகாரத்தில் கைதான திலீப் கேரள நடிகர் சங்கம்மான மலையாளத் திரைப்பட கலைஞர்கள் சங்கம் அம்மாவில் இருந்து  நீக்கப்பட்டுள்ளார். இந்த சங்கத்தில் திலீப் பொருளாளராக இருந்தார். கொச்சியில் பானம்பள்ளி நகரில் நடிகர் மம்முட்டியின் வீட்டில்  நடைபெற்ற அம்மாவின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ் ,அஷிப் அலி,  தேவன்,ரம்யா நம்பீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் நடிகர் மம்முட்டி இதனை அறிவித்தார். அதுபோல் கேரளா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,கேரளா திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு , ஆகியவற்றில் இருந்தும் திலீப் நீக்கபட்டு உள்ளார்.

இந்த நிலையில் அங்கமாலி  சிறைசாலையில் இருந்து இன்று  நடிகர் திலீப் அங்காமாலி நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஆஜர்படுத்தப்பட்டார்.  கேரள போலீசார்  நடிகர் திலீப்பிடம் விசாரணை நடத்த அனுமதி கோரினர். நீதிமன்றம் போலீசார் திலீப்பை 2 நாட்கள் காவலில் எடுத்து  விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும் நடிகர் திலீப் ,சார்பில்  ஜாமீன் மனு தாக்கல் செய்யபட்டது. ஆனால் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

பாவனா கடத்தலில் திலீப் நேரடியாக ஈடுபடாத நிலையிலும் அவர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் கடுமையான சட்டப் பிரிவுகளும் திலீப் மீது பாய்ந்துள்ளன. 120(பி) (கூட்டு சதி), 342 (தவறான தகவல்களை தந்தது), 376(டி) (கூட்டாக கற்பழித்தல்), 411 (ஆவணங்களை மறைக்க முயற்சி), 506(1) (மிரட்டல்), 201 (வழக்கு தொடர்பான தடயங்களை மறைத்தல்),  212 (குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல்), 34 (திட்டமிட்டு செயல்படுதல்) உள்ளிட்ட 9 பிரிவுகளில் திலீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டு கற்பழிப்பு சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் திலீப்புக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சட்டநிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடிகரும்  எம்.எல்.ஏவுமான முகேசிடம் விசாரிக்க உள்ளனர். பல்சர் சுனில்  இதற்கு முன்  முகேஷிடம் டிரைவராக பணியாற்றி உள்ளார்.

நடிகர் திலீப்  சிறையில் அடைக்கபட்டதை தொடர்ந்து  அவரிடம் வளரும் தனது மகளை தன்னிடம் ஒப்படைக்கும் படி கோரி அவரது முன்னாள் மனைவி  மஞ்சு வாரியார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளார்.

திலீப்  சிறையில் 2 ம் எண் செல்லில் அடைக்கபட்டு உள்ளார். அவருக்கு கைதிகள் எண் 523 வழங்கபட்டு உள்ளது.

 

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Prayer to protect from Corona Virus

Read More →