ரவீந்திர ஜடேஜாவும் அவரது மனைவியும் சிங்கங்கள் பின்னணியில் செல்ஃபி எடுத்துக்கொண்ட விவகாரம்; ரூ.20,000 அபராதம் விதிப்பு.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா கடந்த ஜூன் மாதம் தனது மனைவி ரீவாவுடன் குஜராத் மாநிலத்தின் சசன் பகுதியில் உள்ள ‘கிர்’ சிங்கங்கள் சரணாலயத்துக்கு சென்றார். அங்கு அவரும் அவருடைய மனைவியும் சிங்கங்கள் இருக்கும் பின்னணியில் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.
இந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ஜடேஜா எப்படி சிங்கங்களின் அருகில் சென்று படம் எடுத்துக் கொண்டார் என்ற சர்ச்சையும் வெடித்தது.
இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஜூனாகத் தலைமை வன பாதுகாப்பு அதிகாரி ஏ.பி.சிங் உத்தரவிட்டார். இதுபற்றிய அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஜடேஜாவுக்கு வனபாதுகாப்பு அதிகாரி சிங், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார்.
தற்போது ஜடேஜா வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவரது சார்பில் ராஜ்கோட் நகரில் வசிக்கும் அவருடைய மாமனார் ஹர்வேஸ்சிங் சோலங்கி நேற்று ஜூனாகத் நகருக்கு சென்று தலைமை வனபாதுகாப்பு அதிகாரி ஏ.வி.சிங்கை சந்தித்தார். அப்போது விதிமுறைகளை மீறி ஜடேஜா செல்பி எடுத்துக் கொண்டதற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.20 ஆயிரத்தை அவர் செலுத்தினார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.