Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

RBI says demonetization was proposed by Modi government

By   /  January 10, 2017  /  Comments Off on RBI says demonetization was proposed by Modi government

    Print       Email

rbilargeமத்திய அரசின் அறிவுரைக்கு பிறகே ரூபாய் நோட்டு தடைக்கு பரிந்துரை செய்யப்பட்டது: ரிசர்வ் வங்கி விளக்கம்

மத்திய அரசின் அறிவுரைக்கு பிறகே ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது என்று பாராளுமன்ற குழுவிடம் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்து உள்ளது.

InCorpTaxAct
Suvidha

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி இரவு எடுத்தது. மத்திய அரசின் அறிவுரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ரிசர்வ் வங்கியே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததா? என்பது குறித்து சர்ச்சை எழுந்தது.

இதுபற்றி ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்கவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் வீரப்பமொய்லி தலைமையிலான பாராளுமன்ற நிதி குழு கேட்டுக் கொண்டிருந்தது.

இதற்கு விளக்கம் அளித்து ரிசர்வ் வங்கி தரப்பில் 7 பக்கங்கள் கொண்ட குறிப்பை நேற்று பாராளுமன்ற நிதி குழுவுக்கு அனுப்பி வைத்தது.

அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

2016-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு ஒரு குறிப்பை அனுப்பி இருந்தது. அதில் கள்ளநோட்டு, பயங்கரவாதத்துக்கு நிதி உதவி, கருப்பு பணம் ஆகிய 3 பெரும் பிரச்சினைகள் உள்ளன. எனவே ரூ.500, ரூ.1,000 மதிப்பிலான நோட்டுகளை திரும்பப் பெறுவதற்குரிய நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து மறுநாளே ரிசர்வ் வங்கியின் மத்திய குழு கூடி மத்திய அரசின் அறிவுரை குறித்து பரிசீலனை செய்தது. இதுபற்றி ஆழ்ந்து யோசிக்கப்பட்ட பிறகு, உயர் மதிப்பிலான நோட்டுகளை திரும்பப் பெறலாம் என்ற பரிந்துரையை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு தெரிவித்தது.

கருப்பு பணம், கள்ளநோட்டு, பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது ஆகிய பிரச்சினைகளை கையாளுவதில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இது அரியதொரு வாய்ப்பாக அமைந்ததால் உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்தே நவம்பர் 8-ந்தேதி ரிசர்வ் வங்கியின் மத்திய குழு பரிந்துரை செய்த சில மணி நேரங்களிலேயே பிரதமர் மோடி மத்திய மந்திரி சபையை கூட்டி ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவது குறித்து விவாதித்தார். உடனடியாக இந்த மதிப்பிலான நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் குறிப்பு, மத்திய அரசின் கட்டாயம் காரணமாகத்தான் பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன என்பதை அம்பலப்படுத்துவதாக உள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.

இதுபற்றி அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சவுகதா ராய் கூறுகையில், “ரிசர்வ் வங்கியை பிரதமர் தனது கைப்பாவையாக பயன்படுத்தி இருக்கிறார். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்தான் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் ரகுராம் ராஜன் தொடர்ந்து நீடிக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை” என்றார்.

இதை பா.ஜனதா மறுத்து இருக்கிறது.

இதுபற்றி அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கட்டாயப்படுத்தியதாக கூறுவது தவறு. உண்மையில் அரசும், ரிசர்வ் வங்கியும் சரியான பாதையில்தான் செல்கின்றன.

அரசியல் மற்றும் கொள்கை அளவில் கருப்பு பணம், கள்ளநோட்டு, பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது ஆகிய பிரச்சினைகளுக்காக பண மதிப்பு நீக்க முடிவுக்கு மத்திய அரசு ஆதரவாக இருந்தது. அதே நேரத்தில் ரிசர்வ் வங்கியும் நவம்பர் 8-ந்தேதி இதை ஆதரித்தது. எனவே ரிசர்வ் வங்கியின் அதிகாரம் எதிலும் மத்திய அரசு குறுக்கிடவில்லை. அத்து மீறவும் இல்லை. இதில் மத்திய அரசு தவறாகவோ, சட்டவிரோதமாகவோ நடந்து கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →