Loading...
You are here:  Home  >  Movies  >  Bollywood  >  Current Article

Re-Enter the Dragon: a Bruce Lee restrospective

By   /  April 1, 2017  /  Comments Off on Re-Enter the Dragon: a Bruce Lee restrospective

    Print       Email

Bruce-Leeஇரும்பு மனிதர் ‘புரூஸ் லீ’: 2. ஹாலிவுட்டில் நுழைந்த கதை

 

InCorpTaxAct
Suvidha

 

புரூஸ் லீயின் சினிமா கனவு, சீனத் திரைப்படங்களாக உயிர்பெற்றன. நடிப்பு என்பது புரூஸ் லீக்கு கைவந்த கலை. ஏனெனில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததால் கேமராவின் முன்பு தைரியமாகவும், சாதிக்கும் உத்வேகத்துடன் நடித்துக் கொடுத்தார். புரூஸ் லீயின் துடிப்பான நடிப்பும், ஆக்ரோ‌ஷமான சண்டை காட்சிகளும் ஆசிய கண்டத்தின் பிரபல இயக்குநர்களை கவர்ந்திழுத்தது.

அதனால் புரூஸ் லீக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. ‘தி பிக் பாஸ்’, ‘ஸ்பிட் ஆப் பியூரி’ என்ற இரண்டு படங்களில் புரூஸ் லீ நடித்தார். அதில் அவர் பம்பரம்போல் சுழன்று சுழன்று காட்டிய வித்தைகளும், சாகசங்களும் ஆசிய சினிமா பிரியர்களை அசத்தின. ஆனால் ஆசியாவை அசத்திய அந்தப்படங்கள் ஹாலிவுட்டின் கடைக்கண் பார்வையைக்கூட பெறத்தவறின. அதைப்பற்றி கவலைப்படாத புரூஸ் லீ 1972–ம் ஆண்டில் ‘தி ரிட்டன் ஆப் த டிராகன்’ என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். சினிமாவின் மந்திரங்களை ஓரளவுக்கு புரிந்துகொண்டிருந்த புரூஸ் லீ, அந்த படத்திற்கான திரைக்கதையை எழுதியதுடன் தானே இயக்கவும் செய்தார். பொதுவாக சண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட் நடிகர்களை வைத்துதான் படம் எடுப்பது வழக்கம். ஆனால் புரூஸ் லீயோ கேமரா வித்தைகள் இல்லாமல் அதிவேகமாக, அதேநேரத்தில் தத்ரூபமாக சண்டைப் போடக்கூடிய திறமைசாலி என்பதை அந்தப்படம் அமெரிக்கர்களுக்கு உணர்த்தியது.

அதுவரை ஆசிய இளைஞர்கள் மட்டுமே புரூஸ் லீயின் விசிறிகளாக இருந்தனர். ‘தி ரிட்டன் ஆப் த டிராகன்’ படத்திற்கு பிறகு அமெரிக்க ironman_bruceleeஇளைஞர்களும் புரூஸ் லீயின் வெறித்தனமான விசிறிகளாக மாறிப்போயினர். அந்தப்படம் தந்த வெற்றிக்களிப்பில் ‘கேம் ஆப் டெத்’ என்ற தனது அடுத்தப் படத்துக்கான வேலையை ஆரம்பித்தார் புரூஸ் லீ. அவரது பிரபலத்தையும், வசீகரத்தையும் உணர்ந்துகொண்ட ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் ஓடோடி வந்து தங்களுக்காக படம் எடுக்க வேண்டுமாறு புரூஸ் லீயைக் கேட்டுக்கொண்டனர். புரூஸ் லீயின் வேகமும், அதிரடியான குத்துகளும் ஹாலிவுட் ரசிகர்களை ரசிக்க வைத்தது. மேலும் குத்துச்சண்டையும், குங்கு பூ கலையும் ஒருசேர கலந்த சண்டை காட்சிகள், ஹாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதற்கு தன்னுடைய குருவான இப்–மானையே காரணமாக்கினார்.

ஆம்.! புரூஸ் லீ, ரவுடி கூட்டத்தின் தலைவராக இருந்த சமயத்தில் சண்டையிட்டாலும், குங்கு பூவை முழுமையாக கற்றுக்கொள்ளவில்லை. அரை குறை குங்கு பூவை வைத்தே ரவுடி கூட்டத்தின் தலைவன் என்ற அந்தஸ்தை பிடித்துவிட்டார். இருப்பினும் முறையான குங்கு பூ கற்றுக்கொள்ளும் ஆசை புரூஸ் லீயிடம் இருந்தது. அதற்காக குங்கு பூ தற்காப்பு கலைக்கு புகழ்பெற்ற இப்–மானை சந்தித்தார். அவர் புரூஸ் லீயை வேகமானவராகவும், விவேகமானவராகவும் தயார்படுத்தினார்.
இப்–மான் சிறந்த தற்காப்பு கலை வீரர் என்பதால், புரூஸ் லீயும் தாக்குதலை விட தற்காப்பு கலையை நன்கு கற்றுக்கொண்டார். அதே போல இப்–மானின் வேகமான அசைவுகளும், புரூஸ் லீயை வியக்க வைத்தன. அதனால் கூடுதலாக நேரம் ஒதுக்கி வேகமாக அசையும் வித்தைகளையும், எதிராளியின் சிந்தனை ஓட்டத்தை தெரிந்து கொள்ளும் வித்தைகளையும் கற்றுக் கொண்டார். மேலும் இப்–மானின் மானசீக மாணவராகவும் மாறினார். ஒருபுறம் குத்துச்சண்டை, மறுபுறம் குங்கு பூ என புரூஸ் லீயின் ஸ்டைல் ஹாலிவுட்டை கலக்க, அதற்கு முன்பு அவரை விமர்சித்தவர்கள் எல்லாம் வியந்துபோனார்கள்.

‘டூப்’ போட ஆட்கள் இருக்கு கிளம்பு..!’ என்று சொன்னவர்கள் எல்லாம், தங்கள் படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொடுக்கும்படி புரூஸ் லீயை கட்டாயப்படுத்தினர். ஹாலிவுட்டில் நடிக்க  வேண்டுமென்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டவராயிற்றே அவர். உடனே தனது சொந்த படத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஹாலிவுட்டுக்காக ‘என்டர் தி டிராகன்’ என்ற படத்தை எடுக்கத் தொடங்கினார். அசுர வேகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு, ரீ ரெக்கார்டிங், எடிட்டிங் வேலைகள் அனைத்தும் இரண்டே மாதங்களில் முடிவடைந்தன. அத்துடன் புரூஸ் லீயின் வாழ்நாளும் முடிவுக்கு வந்தது. ‘என்டர் தி டிராகன்’ என்ற படம் திரைக்கு வெளிவர மூன்றே வாரங்கள் இருந்த போது மர்மமான முறையில் புரூஸ் லீ இறந்தார். அதற்கு புரூஸ் லீயின் காதல் மனைவி லிண்டாவை சிலர் காரணமாக்கினார்கள். அத்துடன் வேறு சில சந்தேக முடிச்சுகளும் விழுந்தன. ஆனால் அவை இன்று வரை அவிழ்கப்படாமலேயே இருக்கிறது. ஹாலிவுட் படிக்கெட்டில் வேகமாக ஏறிய புரூஸ் லீயை, காதல் மனைவியே சாவு என்ற பள்ளத்தில் தள்ளிவிட்டதாக பலரும் கூறுகிறார்கள்.

புரூஸ் லீயின் வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் காதல் கதையையும், இறப்பில் இருக்கும் சந்தேக முடிச்சுகளையும் அடுத்த வாரம் அவிழ்க்கலாம்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →