Loading...
You are here:  Home  >  Politics  >  Delhi Politics  >  Current Article

Remove  ban  on  Chennai  Super kings- Swamy  moves  to  court

By   /  February 10, 2016  /  Comments Off on Remove  ban  on  Chennai  Super kings- Swamy  moves  to  court

    Print       Email

சென்னை சூப்பர் கிங்ஸூக்கான தடையை ரத்து செய்யுங்கள். உயர்நீதி மன்றத்தில் சுப்பிரமணியம் சாமி மனு.Subramanian-Swamy-PTI

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற சில அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, ஐ.பி.எல். போட்டிகளில் இரு அணிகளும் 2 ஆண்டுகள் விளையாட தடை விதித்து உத்தரவிட்டது.

InCorpTaxAct
Suvidha

இந்த தடை உத்தரவை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பிலும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஐ.பி.எல். போட்டிகளில் தடைவிதிக்கப்பட்ட அணிகளில், நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒரு சிலருடைய தவறுகளுக்காக ஒட்டுமொத்த அணிக்கும் தடை விதிப்பதை ஏற்க முடியாது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை மக்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்களுக்கே பெருமை சேர்க்கும் அணியாக திகழ்ந்தது. இந்த அணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே சென்னை அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Today is PV Narasimha Rao’s Jayanthi

Read More →