Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

Rescue my son from Isha Yoga foundation – one more complaint to police.

By   /  August 9, 2016  /  Comments Off on Rescue my son from Isha Yoga foundation – one more complaint to police.

    Print       Email

Sadhguru-Jaggi-Vasudevஎன்னுடைய மகனை மீட்டுத் தாருங்கள். மேலும் ஒரு பெற்றோர் போலீசில் மனு.

கோவை ஈசா யோகா மையத்தில் சிக்கியுள்ள தனது மகனை மீட்டுக்கொடுக்க வேண்டும் என தூத்துக்குடியை சேர்ந்தமேலும் ஒரு பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அடுக்கடுக்கான புகார்கள் வெளி வந்து கொண்டிருப்பதால், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் வெளிப்படையான விசாரணை குழு அமைத்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

InCorpTaxAct
Suvidha

கோவை ஈசா யோகா மையம் மீது நாள்தோறும் பலவிதமான புகார்கள்  வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்ச்செல்வி மாவட்ட ஆட்சியர் ஹரிகரனிடம், ஈசா மையத்தில் சிக்கியுள்ள தனது மகனை மீட்டுக்கொடுக்கும் படி மனு அளித்தார்.

சிங்கப்பூரில் பணிபுரிந்த தனது மகன் ரமேஷ் என்பவர் ஈசா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்றதாகவும், பின்னர் அங்கேயே இருந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு அவருக்கு மூளைசலவை செய்துள்ளதுடன் ஓரு விதமான மயக்க மருந்தும் கொடுத்துள்ளதாக தெரிவித்த அவர், தனது மகனை தனியாக பார்த்து   பேச கூட ஈசா யோகா மையத்தினர் விடுவதில்லை எனவும் தெரிவித்தார். எனவே ஈசா மையத்தில் இருக்கும் தனது மகனை மீட்டுக்கொடுக்கும் படியும் அவரை மருத்துவமனையில் அனுமதித்து மனரீதியான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்செல்வி வலியுறுத்தினார். தனது கணவர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவரை சந்திக்க கூடவிடாமல் ஈசா நிர்வாகத்தினர் வைத்து இருப்பதாகவும் தமிழ்செல்வி தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்ச்செல்வியை அழைத்து வந்த மாதர் சங்கத்தினர், இதே போன்று ஏராளமானோர் ஈசா யோகா மையத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த மையம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக பெண்களை மூளை சலவை செய்வது, யானை வழித்தடங்களை ஆக்கிரமித்தது, அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டி இருப்பது, ஈசா பள்ளியில் சிறுவர்கள் கடும் தண்டணைகளுக்கு உட்படுத்துவது என தொடச்சியாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில் தனது மகனைமீட்டுக் கொடுக்க கோரி தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

GATeS 15 th Anniversary and Telangana Formation Day Celebrations

Read More →