மக்கள் தினகரனை ஜெயலலிதாவின் இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள் என்பதைத்தான் தேர்தல் முடிவு காட்டுகிறது – தொல். திருமாவளவன்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டுமொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும்.
வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வந்தார். ஆரம்பத்தில் தினகரன் முன்னிலைப் பெற்றதும் தேர்தல் எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் அதிமுகவினர் இறங்கினர். வாக்குவாதங்களும் கைகலப்பும் நாற்காலி உடைப்புகளும் நடந்தன. அரசு அலுவலர் ஒருவர் காயமடைந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு வன்முறை வெறியாட்டம் நடைபெற்றது. இதற்குப் பிறகு போலீசாரால் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலையில் துணை ராணுவம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சென்ற பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. அதற்குப் பின்னர் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு அடுத்து யார் என்ற போட்டியில் தினகரன் வென்றிருக்கிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் திருமாவளவன் கூறுகையில், அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவுக்கு அடுத்து யார்? என்ற போட்டியில் தினகரன் வென்றிருக்கிறார். மேலும், பா.ஜ.க. ஒரு காலத்திலும், தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.