Loading...
You are here:  Home  >  World News  >  Asia News  >  Current Article

Richest  Asian  in  England: Hinduja Brothers  on  top.

By   /  March 20, 2016  /  Comments Off on Richest  Asian  in  England: Hinduja Brothers  on  top.

    Print       Email

hinduja-19-1458381523இங்கிலாந்தில்  வாழும் ஆசிய  பணக்காரர்கள் பட்டியலில்   இந்துஜா சகோதரர்கள்   முதலிடம் பிடித்துள்ளனர். 

இங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்களின் பட்டியலை ஆசிய மீடியா மற்றும் மார்க்கெட் அமைப்பு வெளியிட்டது. அப்பட்டியலில் 101 கோடீசுவரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Suvidha
Biryani Pot

இவர்களில் இங்கிலாந்து வாழ் இந்தியர்களான இந்துஜா, சகோதரர்கள் ஜி.பி. இந்துஜா, எஸ்.பி. இந்துஜா ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கோடி இந்த ஆண்டு இவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கூடுதலாக சொத்து சேர்ந்துள்ளது.

இவர்களுக்கு அடுத்த படியாக 2-வது இடத்தில் மற்றொரு இந்தியரான லட்சுமி என்.மித்தல் உள்ளார். இவர் ஸ்டீல் வர்த்தகத்தில் முன்னணி வகிக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.64 ஆயிரம் கோடி. மற்றொரு இந்திய தொழில் அதிபர் லார்டு சுவராஜ்பால் 15-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி.

இங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.56 லட்சத்து 55 ஆயிரத்து 400 கோடி என பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சொத்து மதிப்பு ரூ.5 லட்சத்து 44 ஆயிரத்து 800 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு பணக்காரர் பட்டியலில் சைரஸ் வந்த் ரேவலா என்பவர் புதிதாக சேர்ந்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி.

-அமுதவன்.

Charter Global
Swapna
InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Birthday wishes to legend Ghantasala

Read More →