ஆண்கள் இரட்டையர் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே போபண்ணா- பயஸ் ஜோடி வெளியேற்றம்
ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இன்று ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- லியாண்டர் பயஸ் ஜோடி போலந்தின் லூகாஸ் குபோட்- மார்சின் மாட்கோவ்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டில் போலந்து ஜோடிக்கு இந்திய ஜோடியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல்செட்டை இந்திய ஜோடி 32 நிமிடத்தில் இழந்தது. போலந்து ஜோடி 6-4 என அந்த செட்டை கைப்பற்றியது.
2-வது செட்டில் தோற்றால் ஒலிம்பிக்கை விட்டு வெளியேற வேண்டும் என்பதால் இந்திய ஜோடி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதற்கு போலந்து ஜோடியும் சரியான வகையில் ஈடுகொடுத்தது. ஆகையால் இரு ஜோடியும் மாறிமாறி கேம்களைக் கைப்பற்றினார்கள்.
இறுதியில் போலந்து ஜோடி 7(8)-6(6) என இந்திய ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 1 மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய ஜோடி 0-2 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ரியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியது.
டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மௌமா தாஸ், மணிகா பத்ரா ஆகியோர் தங்கள் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் தோல்வியடைந்தனர்.
-Ryan.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.