Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

RK Nagar bye-election to be held before December 31: EC

By   /  October 12, 2017  /  Comments Off on RK Nagar bye-election to be held before December 31: EC

    Print       Email

டிச. 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும்: தலைமை தேர்தல் ஆணையர்

 

EIS
EnGeniusInc

 

 

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அம்மாநில சட்டசபை தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் செய்து வருகிறது.

டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் அச்சல்குமார் ஜோதி, இமாசலப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 9-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.

அதன்பின்னர், குஜராத் மாநிலத்துக்கான தேர்தல் தேதி வரும் 16-ம் தேதி அறிவிக்கப்படும் என கூறினார்.

மேலும், இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்தப்படும். முதன்முறையாக பெண்களே முழுவதுமாக 136 வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவார்கள். அனைத்து தொகுதிகளிலும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்படும். வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து, மற்ற மாநிலங்களில் நிலுவையில் உள்ள இடைத்தேர்தல்கள் எப்போது நடைபெறும் என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு தலைமை தேர்தல் ஆணையர் பதிலளிக்கையில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் உள்பட அனைத்து இடைத்தேர்தல்களும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இந்த ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி அறிவிக்கபட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Charter Global
InfoSmart
Swapna
InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

In RK Nagar support increases for DMK – former minister KN Nehru

Read More →