டொரண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இருந்து பெடரர், நடால் விலகல்
கனடாவின் டொரண்டோ நகரில் வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை டொரண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி தொடங்க உள்ளது. இதில் உலகத் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), நான்காம் இடத்தில் இருக்கும் ரபேல் நடால் (ஸ்பெயின்), நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரே, செர்பிய நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்பதாக இருந்தது.
ஆனால், நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரே கடந்த திங்கட்கிழமை போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவர்களைத் தொடர்ந்து ரோஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோரும் இன்று விலகினர்.
இரண்டு முறை டொரண்டோ சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெடரர் கடந்த ஆண்டும் இப்போட்டியில் கலந்துகொள்ளவில்லை. தற்போதும் கனடா ரசிகர்களின் முன்னிலையில் விளையாட முடியாமல் போனது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.
மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் குணமடைந்து ஒரு வாரத்திற்கு முன்புதான் பயிற்சியை தொடங்கியதால் டொரண்டோ போட்டியில் விளையாட முடியாமல் போனதாக நடால் தெரிவித்துள்ளார்.
முன்னணி வீரர்கள் மூன்று பேர் விலகியதால், உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் இந்த போட்டியில் எளிதில் சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.