Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

RS  251  smart phones,  Ringing  bells  returns  money

By   /  February 28, 2016  /  Comments Off on RS  251  smart phones,  Ringing  bells  returns  money

    Print       Email

மலிவு விலை ஸ்மார்ட் போன் ; பதிவு செய்தவர்களுக்குத் தொகையைத் திருப்பித் தருகிறது நிறுவனம்.best-smartphones-of-2014

மலிவு விலை ஸ்மார்ட்போனுக்காக பெற்ற முன்பதிவு தொகையை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் திருப்பித்தர முடிவு செய்துள்ளது.

InCorpTaxAct
Suvidha

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மொஹித் கோயல் கூறும்போது, “ப்ரீடம் 251 செல்போனுக்காக 30 ஆயிரம் வாடிக்கையாளர்களிடம் பெற்ற முன்பதிவு தொகையை திருப்பித் தருகிறோம். செல்போனை தரும் போது அந்தத் தொகை பெற்றுக் கொள்ளப்படும்” என்றார்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘ப்ரீடம் 251’ என்ற பெயரில் உலகின் மலிவு விலை ஸ்மார்ட்போனை ரூ.251-க்கு அறிமுகம் செய்தது. இதை ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

இதன்படி, முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் 30 ஆயிரம் பேர் ஆர்டர் செய்தனர். அவர்களிடமிருந்து தலா ரூ.251 பெற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், பல லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் சிறிது நேரத்திலேயே அந்த நிறுவனத்தின் இணையதளம் முடங்கியது.

இதன்பிறகு 24 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் முன்பதிவு தொடங்கியது. அப்போது, ஒரு மின்னஞ்சல் மற்றும் ஒரு செல்போன் எண்ணிலிருந்து ஒரே ஒரு ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே முன் பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கான தொகையை பெற்றுக்கொள்ளவில்லை. பணம் பெற்றுக்கொள்வது பற்றிய விவரம் வாடிக்கையாளர் பதிவு செய்து கொண்ட மின்னஞ்சல் மூலம் 48 மணி நேரத்தில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு எவ்வித மின்னஞ்சலும் அனுப்பப்படவில்லை.

பணத்தை திருப்பித்தருவது குறித்து ரிங்கிங் பெல்ஸ் நிறுவன தலைவர் அசோக் சத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தவும், தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை விசாரணை

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பின்புலம், நிதி ஆதாரம் பற்றி பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். குறிப்பாக, இத்துறை சார்ந்தவர்கள் தொலைத்தொடர்பு அமைச்சகத்தில் இதுதொடர்பாக புகார் செய்துள்ளனர். இந்நிலையில், ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் குறித்த விசாரணையை அமலாக்கத் துறை தொடங்கி உள்ளது. நிறுவனத்தின் உரிமையாளர்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், நிதி ஆதாரம் உள்ளிட்ட அம்சங்களை அமலாக்கத் துறை கண்காணித்து வருகிறது. இதுபோல வருமான வரித் துறையும் இந்த நிறுவனத்தை கண்காணித்து வருகிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →