Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Rugby in Chennai

By   /  February 20, 2016  /  Comments Off on Rugby in Chennai

    Print       Email

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ரக்பி விளையாட்டு.india-rugby-1-1403432303

தமிழ்நாடு ரக்பி சங்கம் சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன் ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இரண்டு நாட்களுக்கு நடக்கிறது.

InCorpTaxAct
Suvidha

இதில் ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், பிலிப்பைன்ஸ், இந்தியா, நேபாளம், சிரியா அணிகளும், ‘பி’ பிரிவில் தாய்லாந்து, சீன தைபே, லெபனான், வங்காளதேசம், இந்தோனேஷியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். பெண்கள் பிரிவில் களம் காணும் கயாம், இந்தியா, தென் கொரியா, நேபாளம், இந்தோனேஷியா ஆகிய 5 அணிகள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகின்றன.

லீக் ஆட்டங்களில் இந்திய ஆண்கள் அணி, நேபாளத்தையும் சிரியாவையும் பிலிப்பைன்சையும், இந்திய பெண்கள் அணி, நேபாளத்தையும் தென் கொரியாவையும், கயாமையும் சந்திக்கிறது. இந்திய ஆண்கள் அணியில் தமிழகத்தை சேர்ந்த அருள் வெங்கடேஷ் (சென்னை), உதயசங்கர் (சிவகாசி) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்த தகவலை தமிழ்நாடு ரக்பி சங்க சேர்மன் பரணீஸ்வரன், தலைவர் ராஜ் சத்யன், செயலாளர் செந்தில் தியாகராஜன் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தனர்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →