புலிக்குப் பிறந்த்து பூனையாகுமா? -16 வயதிற்குபட்டோக்கான அணியில் சச்சின் மகனுக்கு இடம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான், ஜான் பிராட்மேனுக்கு இணையாக போற்றப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர் சச்சின் தெண்டுல்கர். தனது பேட்டிங் திறமையால் உலகளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100 சதங்கள், இரண்டிலும் தனிப்பட்ட முறையில் அதிக ரன்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்துள்ள சச்சின், இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று கூற வர்ணிக்கப்பட்டவர்.
இப்படிப்பட்ட நட்சத்திர வீரரின் மகனுக்கு கிரிக்கெட் ஆர்வம் இல்லாமல் போய்விடுமா என்ன?. சிறு வயது முதலே தெண்டுல்கர் மகன் அர்ஜூன் மிகுந்த ஆர்வத்துடன் கிரிக்கெட் விளையாடி வருகிறார். தற்போது 16 வயதிற்குட்பட்டோருக்கான மேற்கு மண்டல அணியில் இடம்பிடித்துள்ளார்.
மண்டல வாரியான அணிகளுக்கு இடையிலான தொடர் 24-ந்தேதி ஹூப்ளியில் தொடங்குகிறது. இதற்கான மேற்கு மண்டல 16 வயதிற்குட்பட்டோருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அர்ஜூன் தெண்டுல்கருக்கு இடம் கிடைத்துள்ளது.
மேற்கு மண்டல 16 வயதிற்குட்பட்டோருக்கான வீரர்கள் விவரம்: 1. ஓம் போஸ்லே (கேப்டன்), 2. வாசுதேவ் பட்டீல், 3. சுவேத் பார்க்கர், 4. ஸ்மித் பட்டேல், 5. சன்ப்ரீத் பக்கா, 6. யாஷாஷ்வி ஜெய்ஸ்வால், 7. திவ்யான்ஷ் சக்சேனா, 8. நீல் ஜாதவ் (விக்கெட் கீப்பர்), 9. அர்ஜூன் தெண்டுல்கர், 10. யோகேஷ் டோங்ரே, 11. அதர்வா அங்கோலேகர், 12. சுராஜ் சுர்யால், 13. சித்தார்த் தேசாய், 14. ஆகாஷ் பாண்டே, 15. முகுந்த் சர்தார்.
மாற்று வீரர்கள்: கிரண் மோர், சத்யலக்சய ஜெயின், நிஹர் புயான், விக்னேஷ் சோலங்கி, வைபவ் பாட்டீல்
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.