சாக்ஷியின் பயிற்சியாளர் புலம்பல்
ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற சாக்ஷிமாலிக்கின் வெற்றியில் அவரது பயிற்சியாளர் குல்தீப் மாலிக்கின் பங்களிப்பு மகத்தானது. இதை பாராட்டி அரியானா மாநில அரசு ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவித்து, நிகழ்ச்சியில் மாதிரி காசோலையை வழங்கியது.
ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் உண்மையான காசோலை அவருக்கு வந்து சேரவில்லை. வடக்கு ரெயில்வேயில் தலைமை டிக்கெட் பரிசோதகராக வேலை பார்க்கும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று ரெயில்வே துறை உறுதி அளித்தது. அதுவும் நிறைவேற்றப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்களை பல முறை தொடர்பு கொண்டும் பலன் கிடைக்கவில்லை.
“நான் பரிசுக்காக அலையவில்லை. ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் காப்பாற்றப்பட வேண்டும். நாங்கள் எவ்வளவு பெரிய சாதனை படைத்திருக்கிறோம் என்பதை எல்லோரும் அறிவார்கள். என்னை பொறுத்தவரை சாக்ஷியின் வெண்கலப் பதக்கம் தான் எனக்கு எப்போதும் மிகப்பெரிய பரிசாக இருக்கும்’ என்று குல்தீப் மாலிக் தெரிவித்தார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.