சல்மான்கானிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் நோட்டீஸ்
இந்தி நடிகர் சல்மான்கானிடம் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்ட்ட பெண் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்பவர் தனது வழக்கறிஞர் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில், பலாத்காரத்துக்கு உள்ளான தனக்கு சல்மான்கானின் கருத்து மேலும் பாதிப்பை உருவாக்கியுள்ளதாகவும், இதனால் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ரேஷ்மா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 10 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி அவர் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பின்போது பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணாக தான் உணர்ந்ததாக சல்மான்கான் கூறியிருந்தார். இதற்காக அந்தப் பெண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சல்மான் கான், தான் மல்யுத்த வீரராக நடித்துள்ள சுல்தான் படம் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்தார். அதில், சுல்தான் படப்பிடிப்பில் மிகவும் சிரமப்பட்டு நடித்ததாக கூறிய சல்மான் கான், 6 மணிநேரம் 120 கிலோ எடையை தூக்க வேண்டி இருக்கிறது.
மல்யுத்த சண்டை காட்சியிலும் நடிக்க வேண்டி உள்ளது. இதனால் களைப்பாக இருக்கிறேன். நேராக நிற்கவோ, நடக்கவோ முடியாது. தினமும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது நேராக நடந்து செல்ல முடியாமல், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணைப் போல உணர்வதாக கூறியிருந்தார்.
சல்மானின் கான் இந்த பேச்சு பெண்களை இழிவு படுத்துவதாக உள்ளது என்று பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இந்த நடிகர் சல்மான் கானுக்கு மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த ஆணையத்தின் தலைவர் விஜயா ரத்னாகர், வருகிற 29ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் ஆஜராகுமாறு சல்மான்கானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.