Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Salman Khan’s father apologizes on behalf of Salman Khan over Khan’s controversial speech.

By   /  June 21, 2016  /  Comments Off on Salman Khan’s father apologizes on behalf of Salman Khan over Khan’s controversial speech.

    Print       Email

கற்பழிக்கப்பட்ட பெண்கள் என்று பேசியது தொடர்பான பேச்சுக்கு சல்மான் கானின் தந்தை மகனுக்காக மன்னிப்புக் 709841கோரினார். 

இந்தி நடிகர் சல்மான் கான் தற்போது ‘சுல்தான்’ படத்தில் மல்யுத்த வீரராக நடித்திருக்கிறார். இந்த படத்தின் அறிமுகம் தொடர்பான பிரமோஷன் விழாவின்போது சல்மான் கான் கூறிய ஒரு கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

InCorpTaxAct
Suvidha

“இந்த படத்துக்காக 6 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்பில் முழு ஈடுபாட்டுடன் இருந்தேன். மல்யுத்த காட்சியில் நடிக்கும்போது 120 கிலோ எடை உள்ள ஒருவரை 10 முறை, வித்தியாசமான கோணத்தில் தூக்கினேன். இதுபோல் பல தடவை செய்ய வேண்டியது இருந்தது.

இது உண்மையான சண்டையாகவே அமைந்தது. திரும்பத் திரும்ப இதுபோன்ற காட்சிகளை படமாக்கியபோது நான் மிகவும் சோர்ந்து விட்டேன். நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே வந்தபோது ஒரு கற்பழிக்கப்பட்ட பெண் போன்ற வேதனையை உணர்ந்தேன். நான் முழு பலத்துடன் நடக்க முடியவில்லை. சாப்பிடும் போதும், மீண்டும் பயிற்சியில் ஈடுபட்ட போதும் உடல் வலி இருந்தது. வலி குறையவில்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

கற்பழிக்கப்பட்ட பெண்ணுடன் தனது படப்பிடிப்பு அனுபவத்தையும் இணைத்து கூறியுள்ள சல்மான்கானின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. கற்பழிக்கப்பட்டதால் வேதனைப்படும் பெண்களை மேலும் காயப்படுத்தும் விதமாக சல்மான்கான் கூறியுள்ளார். இது கண்டனத்துக்குரியது என்று மகளிர் அமைப்புகள் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்நிலையில், இந்த சர்ச்சை கருத்து தொடர்பாக நடிகர் சல்மான் கானின் சார்பாக அவரது தந்தையும் பிரபல இந்திப்பட இயக்குனருமான சலிம் கான் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள சலிம் கான், ‘சுல்தான் பட அறிமுக விழாவில் சல்மான் கான் தெரிவித்திருந்த கருத்து சந்தேகத்துக்கு இடமின்றி தவறானதுதான். அவரது உவமை, உதாரணம் போன்றவை தவறானது, எனினும், அந்த கருத்தை பதிவு செய்த அவரது நோக்கம் தவறானது அல்ல.

இருந்தாலும், சல்மான் கானின் குடும்பத்தார், ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →