நான் இனிமேல் பேச்சைக் குறைத்துக்கொள்ளப் போகிறேன். ஸ்பெயின் தலைநகரில் சல்மான்கான் அறிவிப்பு.
இந்தி நடிகர் சல்மான் கான் தற்போது ‘சுல்தான்’ படத்தில் மல்யுத்த வீரராக நடித்திருக்கிறார். சமீபத்தில், இந்த படத்தின் அறிமுகம் தொடர்பான பிரமோஷன் விழாவின்போது சல்மான் கான் கூறிய ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
“இந்த படத்துக்காக 6 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்பில் முழு ஈடுபாட்டுடன் இருந்தேன். மல்யுத்த காட்சியில் நடிக்கும்போது 120 கிலோ எடை உள்ள ஒருவரை 10 முறை, வித்தியாசமான கோணத்தில் தூக்கினேன். இதுபோல் பல தடவை செய்ய வேண்டியது இருந்தது.
இது உண்மையான சண்டையாகவே அமைந்தது. திரும்பத் திரும்ப இதுபோன்ற காட்சிகளை படமாக்கியபோது நான் மிகவும் சோர்ந்து விட்டேன். நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே வந்தபோது ஒரு கற்பழிக்கப்பட்ட பெண் போன்ற வேதனையை உணர்ந்தேன். நான் முழு பலத்துடன் நடக்க முடியவில்லை. சாப்பிடும் போதும், மீண்டும் பயிற்சியில் ஈடுபட்ட போதும் உடல் வலி இருந்தது. வலி குறையவில்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
கற்பழிக்கப்பட்ட பெண்ணுடன் தனது படப்பிடிப்பு அனுபவத்தையும் இணைத்து கூறியுள்ள சல்மான்கானின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. கற்பழிக்கப்பட்டதால் வேதனைப்படும் பெண்களை மேலும் காயப்படுத்தும் விதமாக சல்மான்கான் கூறியுள்ளார். இது கண்டனத்துக்குரியது என்று மகளிர் அமைப்புகள் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.
இந்த சர்ச்சை கருத்து தொடர்பாக நடிகர் சல்மான் கானின் சார்பாக அவரது தந்தையும் பிரபல இந்திப்பட இயக்குனருமான சலிம் கான் மன்னிப்பு கேட்க நேர்ந்தது.
இந்நிலையில், ஸ்பெயின் தலைநகரான மேட்ரிட் நகரில் நடைபெற்றுவரும் 17-வது சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் சல்மான் கான், இனி பேச்சை குறைத்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
இவ்விழாவில் ‘மைக்’ஐ வாங்கி பேசிய சல்மான் கான், இந்த மாலைப் பொழுது மிக நீளமாக உள்ளது. எனவே, நான் எனது பேச்சை குறைத்துக் கொள்வது நலமாக இருக்கும் என கருதுகிறேன்’ என சல்மான் சொல்லி முடித்ததும், பத்திரிகையாளர்கள் உள்பட அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி பலமாக சிரித்தனர்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.