Loading...
You are here:  Home  >  Politics  >  Delhi Politics  >  Current Article

Sanitation workers strike in Delhi: AAP ministers use brooms to clean

By   /  February 1, 2016  /  Comments Off on Sanitation workers strike in Delhi: AAP ministers use brooms to clean

    Print       Email

துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்; ஆம் ஆத்மி மந்திரிகளும் எம்எல்ஏக்களும் குப்பைகளை அகற்றினார்கள்.AAP-MLA-2-compressed-580x395

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநகராட்சி ஊழியர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

InCorpTaxAct
Suvidha

இதனால் சாலைகள், தெருக்கள் எங்கும் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. துர்நாற்றமும் பரவத் தொடங்கியுள்ளது.

பெங்களூரில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது மந்திரிகள், எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்களுக்கு டுவிட்டர் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். பொதுப்பணித்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து குப்பைகளை அகற்ற அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளும் கட்சியான ஆம் ஆத்மி மந்திரிகள் எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கையில் துடைப்பம் ஏந்தி டெல்லியில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றினர்.

இதில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சுற்றுலாத்துறை மந்திரி கபில் மிஸ்ரா, பொதுப்பணித்துறை மந்திரி சத்யைந்திர ஜெயின், மற்றும் சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் ஆகியோரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →