செப்டம்பர் 8, 2019 அன்று அட்லாண்டாவில்

சங்கரநேத்ராலயா ஓம் டிரஸ்ட் நடத்திய ”த்ரிஷ்டி” நிதி திரட்டும் நிகழ்ச்சி
பத்திரிகை செய்திக்குறிப்பு
சென்னை, சங்கர நேத்ராலயாவின் இலவச கண் சிகிச்சை திட்டங்களுக்கென அட்லாண்டாவில், இன்ஃபினிட் எனர்ஜி செண்டர் இல் செப்டம்பர் 8, 2019 அன்று த்ரிஷ்டி எனும் நாட்டிய நாடகத்தின் மூலம் $200,000 திரட்டி, 3000 ஏழை எளிய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மொழி பேசும் மக்களும் கலந்து கொண்ட நிலையில், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயகிரன் பகதலா அவர்கள் பல்வேறு மொழிகளில் சங்கர நேத்ராலயாவின் சேவைகளைப் பற்றியும், தற்போது கூகுள் தலைமை செயல் அதிகாரி திரு சுந்தர் பிச்சை அவர்கள், சங்கர நேத்ராலயாவுடன் இணைந்து செயல்படும் நீரிழிவு விழித்திரை திட்டத்தைப் பற்றியும், மிக அழகாக தொகுத்து வழங்கினார்.
சங்கர நேத்ராலயாவின் இலவச சிகிச்சைப்பிரிவுக்காக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நிதி திரட்டும் நிகழ்வுகள் மற்றும் இந்தியாவில் சங்கர நேத்ராலயா வழங்கும் சேவைகள் குறித்து, ஓம் டிரஸ்ட்டின் அட்லாண்டா பிரதிநிதி ஸ்ரினி ரெட்டி வங்கிமல்லா, துணைத் தலைவர் மூர்த்தி ரெகபள்ளி மற்றும் தலைவர் பாலா ரெட்டி இந்தூர்த்தி ஆகியோர் த்ரிஷ்டி பரத நாட்டியம் நிகழ்ச்சிக்கு முன்பு பார்வையாளர்களிடையே உரை நிகழ்த்தினர்.
மேடையில் திருஷ்டி நடன நாடகம் ஆரம்பமான போது, மிகவும் திறமையான குரு ஸ்ரீமதி பத்மஜா கெலாம் கருவும் அவரது குழுவும் சங்கரா நேத்ராலயாவின் சேவையை மனதில் அசை போட்டு, ஹாசினி எனும் கதாபாத்திரம் கண் பார்வையை இழக்கும் விதம் மற்றும் பார்வையின்மை காரணமாக அவர் அடைந்த அனுபவங்கள், இருப்பினும் நடனத்தின் மீதான தனது ஆர்வத்தை அவர் திரும்பப் பெறும் விதம், என்று அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்தி ஹாசினியாக நடித்த சிறுமி ‘உங்கள் ஆர்வத்தைத் தொடரும்போது உள் உணர்வுகளுக்கு எல்லைகள் இல்லை, என்பதை மிக அருமையாக வெளிப்படுத்தினாள்”.
இந்த த்ரிஷ்டி எனும் நாட்டிய நாடகத்தை வழங்க மிகவும் கடினமாக உழைத்த பத்மஜா கெலாம், சித்தார்த்த கெலாம் மற்றும் குழந்தைகள் குழு, பாடல்களை எழுதிய டாக்டர் உமா உன்னி, இசை அமைத்த ஆஷா ரமேஷ் ஆகிய அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.
ஹாசினியாக நடித்த பிரியங்கா கசுலா, பத்மஜா கெலாம் அவர்களின் மாணவி, குருவின் மனதினை படம் பிடித்து அற்புதமாக தனது திறமையை வெளிப்படுத்தினாள்.
நிகழ்ச்சியை வடிவமைத்தவர் திரு சித்தார்த்த கெலாம், இயக்கியவர் திருமதி பத்மஜா கெலாம் இருவரும் இந்த நாட்டிய நாடகத்திற்காக அற்பணிப்பு மனப்பான்மையுடன் நீண்ட நாட்கள் உழைத்திருப்பதை உணர முடிந்தது.
சங்கர நேத்ராலயா ஓம் டிரஸ்டின் அட்லாண்டா பிரதிநிதிகள், பாலா ரெட்டி இந்தூர்த்தி, மூர்த்தி ரேகபள்ளி, ஸ்ரினி ரெட்டி வங்கிமல்லா, ராஜசேகர் ரெட்டி அய்லா, மெஹர் லங்கா, ஜெயகிரண் பகடலா, பத்மஜா கேலம், உபேந்திர ரெட்டி ராச்சுபள்ளி, ரமேஷ் சபராலா, ராஜீவ் மேனன், சுரேஷ் ஆகியோர் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். இந்த வெற்றியை அட்லாண்டா பிரிவின் நிறுவனர் டாக்டர் சேசு சர்மாவுக்கு திருமதி பாலா இந்தூர்த்தி அர்ப்பணித்தார்.
அட்லாண்டா ஓம் டிரஸ்ட்டின் நிறுவனர் டாக்டர் சேசு சர்மா, தனது பேரக் பெரிய குழந்தைகளுடன் தங்குவதற்காக வாஷிங்டன் டி.சி.க்கு தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.
அட்லாண்டா குழு உறுப்பினர்கள் கிருஷ்ணதாஸ் பிஷரோடி, ஸ்ரீகிருப ஈஸ்வரன், பானி டோக்கா, உமா நாராயண், ராகவா தடாவர்த்தி, கமல் சதுலுரு, நம்ரதா சதுலூரு, ராஜேஷ் தாடிகமல்லா, ரமேஷ் வள்ளூரி, வெங்கட் சுந்தல் ராமட் ஆகியோருக்கும், இந்த நிகழ்ச்சிக்கென தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கடின உழைப்பினை அளித்தமைக்காக விஜு சிலுவேரு, நிரஞ்சன் இருவருக்கும் மற்றும் புரோடுதுரி & பைட் கிராஃப் அமைப்புக்கும் தமது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள்..
Mobile Eye Surgical Unit (மொபைல் கண் அறுவை சிகிச்சை பிரிவு) க்கு நன்கொடை அளித்த திரு மூர்த்தி ரேகா பள்ளி & மாதவி மற்றும் அனில் ஜாக்ரால்முடி & மகாலட்சுமி ஆகியோர் ”இந்தியாவில் தடுக்கக்கூடிய பார்வையிழப்பினை ஒழிப்பதே MESU வின் முக்கிய நோக்கம். ஆரம்பத்தில் நாங்கள் தெலுங்கு மாநிலங்களிலும் இந்த MESU திட்டத்தினை கொண்டு வரவும், மேலும் நிறைவாக இந்தியா நாடு முழுவதும் அதே மாதிரியைப் பிரதிபலிக்க விரும்புகிறோம் என்று குறிப்பிட்டார்கள்.

திரு முல்ரி ரெட்டி & பிந்து, டாக்டர் சஞ்சீவ ரெட்டி & ஸ்ரீதேவி, சுரேஷ் வேமுலமாதா மற்றும் டாக்டர் மாதவி ராயபுடி, சீனிவாஸ் சுரப்பானேனி & பிரியா, ஸ்ரினி ரெட்டி வங்கிமல்லா & தீபா, பிரசாத் மல்லு மற்றும் நிவேதிதா ரெட்டி மரகா & பிரவீனா, மற்றும் பாலகிருஷ்ணா நூலி ஆகியோர் ஒவ்வொரு கிராமங்களையும் தத்தெடுக்கும் திட்டத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளார்கள்.
பானி டோக்கா மற்றும் பிரமீலா கோபு இருவரும் தயாரித்த சுந்தர் பிச்சை ,கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி, அமிதாப் பச்சன், சவுரவ் கங்குலி மற்றும் மாதவன் ஆகியோர் பங்கு பெறும் வீடியோவினை நிகழ்ச்சியில் ஒளிபரப்பினர்.
ஓம் டிரஸ்ட்டின் அட்லாண்டா கிளை தொடங்கியதிலிருந்து அவர்கள் அளித்த ஆதரவிற்காக சமூகத் தலைவர்கள் மற்றும் பரோபகாரர்கள் டாக்டர் பி.கே.மோகன் & ராஜ்யலக்ஷ்மி, பிரமோத் சஜ்ஜா & பிரதிமா, டி.ஆர்.ரெட்டி & நிரஞ்சினி, டாக்டர் ஜி.எஸ். விஸ்வேஸ்வரா, வீணா பட் ஆகியோரை சங்கர நேத்ராலயா குழு கௌரவித்தது.

சங்கரா நேத்ராலயா ஓஎம் அறக்கட்டளையின் நிறுவனர் திரு எஸ் வி ஆச்சார்யா இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார். அவர் தனது செய்தியை அட்லாண்டா பார்வையாளர்களுக்கு தொலைபேசியில் தொலைபேசியில் தெரிவித்தார், அவர்களின் நீண்டகால ஆதரவுக்கு நன்றி மற்றும் அட்லாண்டா கிளை அமெரிக்காவின் மிகவும் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படும் கிளையாக செயல்படுகிறது என்று அறக்கட்டளைத் தலைவர் திரு பாலா ரெட்டி இந்தூர்த்தியை பாராட்டினார்.

Photo Gallery: https://venkatphotography.com/drishti
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.