சரிதா நாயரின் சுயசரிதை தமிழில் வருகிறது.
தமிழில் வெளியாகும் தனது சுயசரிதையில் சோலார் பேனல் முறைகேடு மற்றும் தான் அந்த ஊழலில் சிக்கிய சூழ்நிலை குறித்த தகவல்கள் விரிவாக இடம்பெறும் என காற்றாலை மோசடி தொடர்பான வழக்கில் ஆஜராக கோவைக்கு வந்த சரிதா நாயர் தெரிவித்தார்.
கோவை வடவள்ளியில் சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை நிறுவனத்தின் இயக்குநர்களான சரிதா எஸ்.நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் நாயர், ஆர்.சி.ரவி ஆகியோர் காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி சுமார் ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக, கடந்த 2009-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர். தற்போது 3 பேரும் ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கு கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ராஜவேல் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சரிதா நாயர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 19-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் சரிதா நாயர் கூறியதாவது: சோலார் பேனல் ஊழல் தொடர்பாக 90 சதவீத ஆதாரங்கள் சோலார் பேனல் கமிஷனிடம் சமர்ப்பிக்கப் பட்டு உள்ளன. தற்போது நடை பெற்று வரும் சோலார் பேனல் விசாரணையில் அரசின் நட வடிக்கை திருப்தி அளிக்கும் வகை யில் உள்ளது. இந்த முறைகேட்டில் சிக்கியவர்களிடம் இருந்து தற் போதும் எனக்கு மிரட்டில் வந்து கொண்டு இருக்கிறது.
தமிழ் பத்திரிகை ஒன்று, எனது சுயசரிதையை வெளியிடுகிறது. அதில், சோலார் பேனல் ஊழல் மற்றும் நான் அந்த ஊழலில் சிக்கிய சூழ்நிலை குறித்த தகவல்கள் விரிவாக இடம்பெறும் என்றார்.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.