Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Sashikala consults advocates in jail, regarding raids.

By   /  November 15, 2017  /  Comments Off on Sashikala consults advocates in jail, regarding raids.

    Print       Email

வருமான வரி சோதனை குறித்து வழக்கறிஞர்களுடன் சசிகலா ஆலோசனை: விவேக், தினகரனுக்கு கடிதம் அனுப்பினார்.

 

InCorpTaxAct
Suvidha

 

 

உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் நடந்த தொடர் வருமான வரி சோதனை குறித்து பெங்களூரு சிறையில் வழக்கறிஞர்களுடன் சசிகலா தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சசிகலாவின் உறவினர்களான விவேக், கிருஷ்ண ப்ரியா, திவாகரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான 187 இடங்களில் அண்மையில் வருமான வரி சோதனை நடத்தியது.

ஆயிரக்கணக்கான அதிகாரிகள் 5 நாட்கள் தொடர்ச்சியாக நடத்திய சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள், தங்க, வைர நகைகள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் மூலமாக மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அறையை விட்டு வெளியே வராமல் வருமான வரி சோதனை தொடர்பான செய்திகளிலே மூழ்கி இருக்கிறார்.

அறையில் தன்னுடன் உள்ள இளவரசியிடம் விவேக், கிருஷ்ணப்ரியா, திவாகரன் உள்ளிட்ட குடும்பத்தினரின் வீடுகளில் சோதனை நடத்தியது தொடர்பாக நீண்ட நேரம் விவாதித்தார். விவேக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையும், வருமான வரித்துறை நடத்திய விசாரணையும் சசிகலா, இளவரசி மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது இருவரின் நடத்தையிலும் தெரிவதாக சிறைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில் சசிகலா கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வழக்கறிஞர் அசோகனுக்கு சிறை அதிகாரிகள் மூலம் தகவல் அனுப்பினார். இதையடுத்து சென்னையில் இருந்து பெங்களூரு வந்த அசோகன் நேற்று முன் தினம் மாலையில் சசிகலாவை சந்தித்தார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, வருமான வரி சோதனை தொடர்பாக சசிகலா சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிவிவி தினகரன், ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஆகியோருக்கு தனித்தனியாக இரு கடிதங்களை கொடுத்து அனுப்பியதாக தெரிகிறது.

இதேபோல பெங்களூருவில் உள்ள வழக்கறிஞர்கள் மூர்த்தி ராவ், கிருஷ்ணப்பன் ஆகியோர் நேற்று பிற்பகலில் சசிகலாவை சந்தித்துப் பேசினர். சுமார் 1.30 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது வருமான வரித்துறையின் விசாரணையின்போது விவேக் ஆகியோர் அளிக்க வேண்டிய பதில்கள், தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள், சமர்ப்பிக்க வேண்டிய கோப்புகள் உள்ளிட்டவை தொடர்பாக சசிகலா ஆலோசனை வழங்கியதாகத் தெரிகிறது.

இதையடுத்து வெளியே வந்த வழக்கறிஞர் மூர்த்தி ராவ் தொலைபேசி மூலம் விவேக் உள்ளிட்டோருக்கு தகவல் கொடுத்தார். இதே போல வழக்கறிஞர் அசோகன் நேற்று சென்னையில் டிடிவி தினகரன், விவேக், கிருஷ்ணப்ரியா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து சசிகலாவின் ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். சசிகலாவின் ஆலோசனையை தொடர்ந்து விவேக், கிருஷ்ண ப்ரியா உள்ளிட்டோர் இன்னும் சில தினங்களில் பெங்களூரு சிறைக்கு வர முடிவெடுத்துள்ளனர்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

GATeS 15 th Anniversary and Telangana Formation Day Celebrations

Read More →