கொலை மிரட்டல் வழக்கில் சசிகலா புஷ்பாவின் கணவர் முன்ஜாமீன் கேட்டு மனு.
டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. சிவாவை கடந்த சனிக்கிழமை அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சசிகலா புஷ்பாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை போயஸ்கார்டன் வரவழைத்து, கட்சியின் தலைமை நிர்வாகிகள் விசாரணை நடத்தினார்கள்.
இதையடுத்து, டெல்லி சென்ற சசிகலா புஷ்பா, ராஜ்யசபாவில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய கட்சியின் மேலிடம் வற்புறுத்துவதாகவும் பேசினார். இதுநாள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலா புஷ்பாவை நீக்கம் செய்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில், சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் திலகம், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ‘நாங்கள் இருவரும், ஒரு நபரை கொலை மிரட்டல் விடுத்து, காயம் ஏற்படும் வண்ணம் தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் எங்கள் மீது அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பொய் வழக்காகும். நான் (லிங்கேஸ் வரன் திலகம்) ராஜ்யசபா எம்.பி. சசிகலாவின் கணவர். என்னுடைய மனைவியின் அரசியல் வாழ்க்கையை முடிவு கட்டவேண்டும் என்பதற்காக எங்கள் மீது இப்படி ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எங்களை போலீசார் எப்போது வேண்டு மானாலும் கைது செய்யலாம். எனவே, எங்களுக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர், மனு மீதான விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.