முதல்வராக முடியாத ஆதங்கத்தில் ஜெயலலிதா சமாதியை அடித்த சசிகலா: மு.க. ஸ்டாலின் விளாசல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி தலைமயிலான அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு கோரும் தீர்மானத்தின்போது சட்டசபையில் ஏற்பட்ட அமளி தொடர்பாகவும் விளக்கம் அளித்தார்.
பின்னர், கவர்னரை சந்தித்து மனு அளித்தது, மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தங்களை போலீசார் கைது செய்தது, நம்பிக்கை தீர்மானம் செல்லாது என்று ஐகோர்ட்டில் தி.மு.க. தொடர்ந்திருக்கும் வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டசபைக்குள் மாறுவேடத்தில் போலீசார் நுழைந்து தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை அதிரடியாக வெளியேற்றியது தொடர்பாக குறிப்பிட்ட அவர், சென்னை எண்ணூர் அருகே மூன்று வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டுள்ளார். இதை வைத்தே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது? என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, அமைதியை ஏற்படுத்த வேண்டிய போலீசார் கூவத்தூர் சொகுசு விடுதி மற்றும் கோட்டையில் குவிக்கப்பட்டால் இதுபோல் தான் நடக்கும் என்று கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் சட்டசபையில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்காது என்று திராவிடர் கழக தலைவர் கூறியது தொடர்பாக கருத்து தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்டாலின் என்னைப் போன்றவர்களின் பெருமதிப்புக்குரிய வீரமணியின் கருத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது என ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டது தொடர்பாக குறிப்பிட்ட அவர், வைகோ போன்ற அரசியல் ஞானிக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என்றார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவை சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பெங்களூரு புறப்படுவதற்கு முன் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் மூன்றுமுறை சமாதியில் கையால் அறைந்து சபதம் எடுத்தார்.
இதுதொடர்பாக, ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த அவர், சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின்படி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இன்று உயிருடன் இருந்திருந்தால் அவரும் நிச்சயமாக சிறைக்கு சென்றிருக்க வேண்டும்.
இதே வழக்கின் தீர்ப்பின்படி, சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 4 வருடம் தண்டனை பெற்று சசிகலா சிறைக்கு செல்கிறார். ஒருவர் கோபத்தின் விளிம்பில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதுதொடர்பாக எல்லாம் விளக்கம் அளிக்க முடியுமா?
அதுவும் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, பதவி ஏற்க இருந்த நிலையில் இந்த தீர்ப்பு வெளியானது. ஒரேயொரு நாள் முதல்-அமைச்சர் ஆன பிறகு சிறைக்கு சென்றிருந்தால் அங்கு முதல் வகுப்பு கிடைத்து இருக்கலாம். ஆனால், அப்படி பதவி ஏற்க முடியாத ஆத்திரத்தில் ஜெயலலிதாவின் சமாதியில் அவர் மூன்று முறை அடித்திருக்கலாம் என்றார்.
சட்டசபையில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டதை கண்டித்து, வரும் 22-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் தி.மு.க. நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிப்பார்கள் என நம்புவதாக குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இந்த அரசு எஞ்சியுள்ள நான்காண்டு பதவிக்காலத்தையும் நிறைவு செய்யுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த ஆட்சி தொடரக் கூடாது என்பதற்காகதான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றுக் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசியல் களத்தில் கருணாநிதி – ஜெயலலிதா என்பதுபோல் உங்களுக்கு எதிராக யாரை கருதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு எனக்கு எதிராக யாரையும் நான் கருதவில்லை
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.