ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
நடிகர் ரஜினிகாந்த், நடிகை தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. இந்த படத்தை தயாரிக்க, அதன் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர், ‘ஆட் பீரோ’ நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றார். இதற்கு முரளி மனோகர் தாக்கல் செய்த ஆவணங்களுக்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் கையெழுத்து போட்டிருந்தார்.. சில சொத்துகளின் ஆவணங்களை தாக்கல் செய்தார்.
கடன் தொகையில் 8 கோடியே 70 லட்சம் ரூபாயை மட்டுமே தயாரிப்பாளர் முரளி மனோகர் திரும்ப அளித்தார். மீதமுள்ள தொகையை தராமல் இழுத்தடித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முரளி மனோகர் மற்றும் லதா ரஜினிகாந்த் மீது நிதி மோசடி புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆட் பீரோ நிறுவனம், லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று ஆட் பீரோவின் மனுவை தள்ளுபடி செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.
இதைத் தொடர்ந்து, தவறான ஆவணங்கள் மற்றும் போலி நிறுவனம் உருவாக்குதல் போன்ற காரணங்களால் லதா ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடன் வழங்கிய ஆட் பீரோ நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது, வழக்கு தொடர்பாக லதா ரஜினிகாந்த் 4 வாரத்துக்குள் பதிலளிக்க சுப்ரீம் கோர் உத்தரவிட்டது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.