Loading...
You are here:  Home  >  Politics  >  Delhi Politics  >  Current Article

SC to Subramnaiam Swamy not to worry about Ramar Bridge in sethu samudram project

By   /  February 5, 2016  /  Comments Off on SC to Subramnaiam Swamy not to worry about Ramar Bridge in sethu samudram project

    Print       Email

18TH_SUPREME_COURT_1334414f‘சேது சமுத்திரம் சம்பந்தமாக சுப்பிரமணியன் சுவாமி கவலைப்பட வேண்டாம்’- உச்சநீதி மன்றம் அறிவுரை.

ராமர் பாலம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

InCorpTaxAct
Suvidha

ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரியும், சேது சமுத்திர திட்டத்தை ராமர் பாலத்தின் வழியாக நிறைவேற்ற தடை விதிக்க கோரியும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “ராமர் பாலம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி கவலை கொள்ள தேவையில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏற்கனவே தனது முடிவில் தெளிவாகவே உள்ளது. ஒருவேளை ராமர் பாலம் மீது அரசு கை வைத்தால் எங்களிடம் முறையிடுங்கள்.” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

முன்னதாக, இந்த வழக்கில் மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் “சேது சமுத்திர Swamyதிட்டத்தை ராமர் பாலம் வழியாக நிறைவேற்ற மாட்டோம் என்றும், மக்களின் மத உணர்வுகளை கருத்தில் கொண்டு வேறு பாதையில் இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும்” மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவையில் இது குறித்து பேசிய மத்திய மந்திரி நிதின் கட்காரி, “ராமர் பாலத்தை நாங்கள் இடிக்க மாட்டோம். சேதுசமுத்திர திட்டத்திற்கு வேறு நான்கு மாற்று வழிப் பாதைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன” என்றார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →