Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

School conduct for one student near Dindigul

By   /  July 10, 2016  /  Comments Off on School conduct for one student near Dindigul

    Print       Email

201607061230049436_School-conduct-for-one-student-near-dindigul_SECVPFதிண்டுக்கல் அருகே ஒரு மாணவிக்காக செயல்படும் பள்ளிக்கூடம்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே அய்யம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஆரம்பத்தில் நிறைய மாணவ- மாணவிகள் அப்பள்ளியில் பயின்று வந்தனர்.

InCorpTaxAct
Suvidha

சில குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்காக வெளியூர் சென்றனர். ஒரு சிலர் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். இதன் காரணமாக இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்து வந்தது.

கடந்த ஆண்டு இங்கு 5 மாணவர்கள் மட்டுமே படித்தனர். அவர்களில் 4 பேர் 5-ம் வகுப்பை முடித்து வெளியேறி விட்டனர். 4-ம் வகுப்பு படித்த கலைவாணி என்ற மாணவி மட்டும் தற்போது 5-ம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.

இந்த ஒரு மாணவிக்காக பள்ளிக்கூடம் செயல்படுகிறது. 2 ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள்.

இங்கு 3 சத்துணவு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். ஒரு மாணவிக்காக சமையல் செய்ய முடியாததால் அருகில் உள்ள மால்நாயக்கனூர் பள்ளிக்கு சென்று சத்துணவை வாங்கி வந்து மாணவிக்கு வழங்குகின்றனர்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை மீனாட்சி கூறுகையில், இந்த ஊரில் தற்போது பள்ளி பருவத்தில் குழந்தைகள் இல்லை. இங்கு வசித்த ஒரு சில குடும்பத்தினர் வெளியூர் சென்றுவிட்டனர். இதனால் மாணவர்கள் வருகை படிப்படியாக குறைந்து இப்படி ஆகிவிட்டது என்றார்.

குஜிலியம்பாறை ஒன்றியத்தில் இது போல் மிக குறைந்த மாணவர்களை கொண்டு 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுவதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் மாணவர்கள் வருகையை கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை.

இதே நிலை நீடித்தால் பெரும்பாலான அரசு பள்ளிகளை விரைவில் மூட வேண்டிய அபாயம் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →