தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயில். வெறுந் தரையில் ஆம்லெட் போடும் காட்சி.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது..ஆந்திராவின் 13 மாவட்டங்களிலும் 110 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. விஜயவாடாவில் 118 டிகிரி வெயில் பதிவானது. பகலில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே செல்ல தயங்குகின்றனர்.
வெயில் கொடுமைக்கு ஏற்கனவே 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் மேலும் 24 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். கடப்பா, கர்னூல் மாவட்டங்களில் தலா 7 பேரும், சித்தூரில் 4 பேரும், அனந்தபுரம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் தலா 3 பேரும், விஜயநகரம், குண்டூரில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் 103 டிகிரிக்கு வெயில் கொளுத்துகிறது. பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. வெயில் காரணமாக பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில், தற்போது அடித்து வரும் வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் வகையில், தெலங்கானா மாநிலத்தில் ஒருபெண்மணி வெயிலில் வெறுந்தரையில் ஆம்லெட் போடும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.