உலகின் பல தலைவர்கள் வாழும் கலை அமைப்பு நிகழ்ச்சியைப் புறக்கணிப்பு; மோடி பங்கேற்றார்.
‘வாழும் கலை’ அமைப்பின் சார்பாக புதுடெல்லியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற உலக கலாச்சார திருவிழாவில் பிரதமர் மோடி பேசியவை பின் வருமாறு:-
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். பொருளாதார ரீதியாக மட்டும் உலகம் இணைந்திருக்கவில்லை. இப்போது கலாச்சார ரீதியாகவும் உலகம் ஒன்றிணைந்துள்ளது. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. இந்த உலகத்திற்கு பல்வேறு விஷயங்களை கற்றுக் கொடுப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது. உலகம் முழுவதும் இந்தியாவின் பாரம்பரியத்தை பரவச்செய்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு எனது பாராட்டுக்கள்.
நமது கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு குறித்து நாம் நிச்சயமாக பெருமைப்பட வேண்டும். எல்லாவற்றையும் குறை சொல்லிக்கொண்டே இருந்தால், நம்முடைய கலாச்சாரம் குறித்து நாம் பெருமைப்படாமல் இருக்கிறோம் என்றால் இந்த உலகம் ஏன் நம்மை இன்று உற்றுநோக்கிப் பார்க்கிறது? வாழும் கலை வாயிலாக இந்தியாவை உலகம் அறிந்து கொண்டுள்ளது. எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. மங்கோலியாவுக்கு நான் சென்றிருந்தபோது வாழும் கலை அமைப்பை சேர்ந்த ஒரு குடும்பம் என்னை வரவேற்றிருந்ததை என்னால் மறக்க முடியாது.
சர்வதேச உறவுகளை மேம்படுத்த இதுபோன்ற ஒரு கலாச்சார திருவிழா முக்கியமானது. இந்த நிகழ்வை கலாச்சாரங்களின் கும்பமேளாவாகவே நான் பார்க்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.