சென்னையில் பயங்கரம், மனைவியின் மகள்கள் மீது ஆசை ; மனைவி அனுமதிக்காததால் மனைவியையும் 3 மகள்களையும் கொடூரமாய்க் கொலை.
மூத்த மகள் மீது திருமண ஆசை வருவதற்கு முன்பு சின்னராஜ், பாண்டியம்மாள் மற்றும் 3 மகள்களும் ஒரே அறையில் தூங்குவது வழக்கம். அப்போது பாண்டியம்மாளை சின்னராஜ் செக்ஸ் உறவுக்கு அழைப்பார்.
3 மகள்களும் அருகில் படுத்திருப்பதால் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள பாண்டியம்மாள் மறுத்து வந்தார். இதனால் சின்னராஜுக்கும், பாண்டியம்மாளுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் பாண்டியம்மாளின் கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்பட்டதால் அவர் சின்னராஜுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முற்றிலும் மறுத்து விட்டார்.
இதனால் செக்சில் ஆசை கொண்ட சின்னராஜின் பார்வை மூத்த மகள் மீது திரும்பியது. மூத்த மகளை திருமணம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை பாண்டியம்மாளிடம் சின்னராஜ் தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த பாண்டியம்மாள் சின்னராஜையும் வீட்டுக்குள் படுக்க அனுமதிக்கவில்லை.
20-ந்தேதி இரவு சின்னராஜ் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு செக்ஸ் ஆசை ஏற்பட்டது. அதற்கு வசதியாக பாண்டியம்மாளும் அன்று கதவை திறந்து வைத்திருந்தார்.
வீட்டுக்குள் சென்ற சின்னராஜ், பாண்டியம்மாளை உல்லாசத்துக்கு அழைத்தார். அவர் வர மறுத்தார். இதனால் அவரை உலக்கையால் தாக்கியுள்ளார்.
பின்னர் மகள்களையும் கற்பழிக்க முயன்றதாகவும், அதற்கு அவர்கள் உடன்படாததால் அனைவரையும் கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பாண்டியம்மாளின் 3 மகள்களுக்கும் அவர் செக்ஸ் சித்ரவதை கொடுத்தாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும்.
3 பேரையும் கற்பழிக்க முயன்றது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தால் இந்த வழக்கில் கற்பழிப்பு முயற்சியையும் சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கிறார்கள்.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.