அதிக சம்பளம் பெறும் 20 நடிகர்களின் பட்டியலில் ஷாருகான், சல்மான்கான்,அக்ஷய்குமார்
டாப் 10 வரிசையில் இந்திய நடிகர்கள் 3 பேர் இடம் பெற்று உள்ளனர். ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் இடம் பெற்று உள்ளனர். ஷாருகான் 8வது இடத்திலும் சல்மான்கான்- அக்ஷ்ய குமார் 9 மற்றும் 10 வது இடத்தில் உள்ளனர்.
போர்ப்ஸ் பத்திரிகை ஷாருகான் 38 மில்லியன் டாலர் (ரூ. 243.50 கோடி),சல்மான் கான் 37 மில்லியன் டாலர் (ரூ.237 கோடி) அக்ஷய்குமார் , 35.5 மில்லியன் டாலர் (ரூ 227.5 கோடி) சம்பாதித்துள்ளணர் என கூறி உள்ளது. நடிகர் அமீர்கான் இந்த பட்டியலில் இல்லை. அமீர்கான் பட்டியலில் இல்லாததால் ஆச்சரியமாக உள்ளது. அவருடைய 2016 வெளியீடு டங்கல் இந்தியாவின் சிறந்த வசூல் படமாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஷாருகானுக்கு ஜனவரியில் வெளியான சாதாரண பட்ஜெட்டில் உருவான ராய்ஸ் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அது போல் சல்மான்கானின் டூயூப்லைட் ஒரு பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. இதனால் நடிகர் தனது விநியோகஸ்தர்களுக்கு இழப்புக்களை ஈடுசெய்ய வேண்டியிருந்தது.
அக்ஷய்குமாரின் டாய்லட் , ஏக் பிரேம் கதா கடினமான சூழல் மத்தியில் வந்து ரூ 100 கோடி வசூலை தாண்டியது.
ஹாலிவுட் நடிகர் மார்க் வால்பெர்க், $ 68 மில்லியன் டாலர்( ரூ 490 கோடி) வருமானத்துடன் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரது திரைப்படங்கள் டிரான்ஸ்ஃபார்மர்ஸ், தி லாஸ்ட் நைட்.
வின் டீசல் ($ 54.5 மில்லியன்), ஆடம் சேண்ட்லர் ($ 50.5 மில்லியன்) மற்றும் ஜாக்கி சான் ($ 49 மில்லியன்) ஆகியோர் பட்டியலில் மூன்றாம், 4 வது மற்றும் 5 வது இடங்களை கைப்பற்றி உள்ளனர்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.