Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Sharat Kamal & Moumadoss eligible to play Table Tennis in Olympics.

By   /  April 17, 2016  /  Comments Off on Sharat Kamal & Moumadoss eligible to play Table Tennis in Olympics.

    Print       Email

DELHI, INDIA - OCTOBER 12: Sharath Kamal Achanta of India celebrates during the men's singgles quarterfinals match agenst Liang Ma of Singapore in the Table Tennis at the Yamuna Sports Complex during day nine of the Delhi 2010 Commonwealth Games on October 12, 2010 in Delhi, India. (Photo by Ian Walton/Getty Images)

சரத் கமல், மவுமா தாஸ் இருவரும் டேபிள் டென்னிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி.

InCorpTaxAct
Suvidha

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஆசிய தகுதி போட்டி ஹாங்காங்கில் நடைபெற்றது. இதில் இரண்டாம் நிலையின் இறுதிச் சுற்றில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல், ஈரானின் நோஷாத் அலாமியானை எதிர்த்து விளையாடினார். இதில் சரத் கமல் 4-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார்.

அதேவேளையில் மகளிர் பிரிவில் இந்தியாவின் மவுமா தாஸ் தோல்வியடைந்தார். இறுதி சுற்றில் அவர் வட கொரியாவின் ரி மியோங் சனுடன் மோதினார். இதில் மவு தாஸ் 0-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

எனினும் மாலையில் நடை பெற்ற தோல்வியடைந்தவர் களுக்கான இறுதிச் சுற்றில் மவுமா தாஸ் 4-1 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ரிமமா குப்ரனோவாவை வீழ்த்தினார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார்.

ஏற்கெனவே இந்தியாவை சேர்ந்த மனிகா பத்ரா, சவுமியாஜித் கோஸ் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஒலிம்பிக்Achanta-Sharat-Kamal போட்டி டேபிள் டென்னிஸில் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இருபிரிவிலும் சேர்த்து 4 பேர் கலந்து கொள்ள முடியும். இந்தியாவில் இருந்து தற்போது தான் முதன்முறையாக 4 பேர் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →