பணவீக்கத்தினால் ஏற்பட்ட வலியை யோகா குறைக்குமா? மோடிக்கு சிவசேனா கேள்வி.
உலக அளவில் யோகாவை பிரபலப்படுத்தியதற்காக மோடியை பாராட்டியுள்ள சிவசேனா, பணவீக்கத்தினால் ஏற்படும் வலியை யோகாவினால் குறைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கம் வருமாறு:-
யோகாவை உலக அளவில் பிரபலப்படுத்தியதற்காக மோடி பாராட்டுக்குரியவர். மேலும் உலகின் 130 நாடுகளை யோகா மூலம் மோடி தரையில் படுக்கவைத்துள்ளார். ஆனால் தற்போது பாகிஸ்தானை நிரந்தரமாக தரையில் படுக்கவைக்க வேண்டும்.
அது ஆயுதங்களால் மட்டுமே முடியும். பாகிஸ்தானை சவாசனா (பிணம் போல் தரையில் படுத்திருக்கும் யோகா) செய்ய வைக்க வேண்டும்.
யோகா மூலம் பல விஷயங்களை சாதிக்க முடியும். ஆனால், மக்களின் அன்றாட வாழ்க்கையில் உயர் பணவீக்கம் மற்றும் ஊழல்களால் ஏற்படும் வலியை யோகாவினால் குறைக்க முடியுமா? இதற்கும் ஒரு விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.