Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

Siachen  survivor  battles  for  life : U.P lady ready to donate her kidney

By   /  February 10, 2016  /  Comments Off on Siachen  survivor  battles  for  life : U.P lady ready to donate her kidney

    Print       Email

உயிருக்குப் போராடும் சியாச்சென் எல்லைப்புற வீரர்; சிறுநீரகம் தானம் செய்ய முன்வருகிறார் உ. பி. பெண்மணி!how-150-soldiers-amp-2-dogs-rescued-the-sole-siachen-survivor-652x400-1-1455097631
சியாச்சின் சிகரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பனிச்சரிவில் இந்திய ராணுவ காவல்சாவடி பனியில் புதைந்தது. அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ராணுவ அதிகாரி உள்பட 10 வீரர்கள் பனியில் புதைந்தனர். இவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வீரர் மட்டும் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

மைனஸ் 40 டிகிரி குளிரில் 6 நாட்களாக இருந்ததால் அவரது உடலின் பல்வேறு பாகங்கள் செயலிழந்துவிட்டதால் கோமா நிலையில் இருக்கிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

InCorpTaxAct
Suvidha

அவர் உயிர்பிழைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பலர் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், அவருக்கு சிறுநீரகம் தானம் கொடுப்பதற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நிதி பாண்டே என்ற பெண் முன்வந்துள்ளார்.

லக்கிம்பூர் கெரியில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள பாடரியா துலா கிராமத்தைச் சேர்ந்த நிதி பாண்டே இதுபற்றி கூறுகையில், “நாட்டுக்கு சேவை செய்த வீரரின் சிறுநீரகங்கள் மற்கும் கல்லீரல் செயலிழந்து உயிருக்கு போராடுவதாக தொலைக்காட்சியில் செய்தி பார்த்தேன். அவருக்காக பிரார்த்தனை செய்வதுடன், அதற்கும் மேலாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து, சிறுநீரகம் தானம் செய்ய முடிவு செய்தேன்.

தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அவசர தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு, எனது விருப்பதை தெரிவித்தேன். இதற்கு தன் கணவரும் சம்மதம் தெரிவித்தார்” என்றார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Shailesh Lakhtakia’s Journey

Read More →