Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

Siachen  survivor  Hanumanthappa  passes away.  Rahul, Kejriwal  pays  respect.

By   /  February 12, 2016  /  Comments Off on Siachen  survivor  Hanumanthappa  passes away.  Rahul, Kejriwal  pays  respect.

    Print       Email

சியாச்சின் வீரர் உயிரிழந்தார். ராகுல், கேஜ்ரிவால் இறுதி அஞ்சலி.17f26610-a88e-47da-9762-af02ee753d39_S_secvpf

எப்படியாவது உயிர் பிழைக்கச் செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக ஈடுபட்ட டாக்டர்களின் முயற்சி கடைசியில் பலனளிக்காமல் போய்விட்டது. “எங்களிடம் கொண்டுவரப்பட்டபோது ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். மூளைக்குச் செல்ல வேண்டிய ஆக்சிஜன் சுத்தமாக இல்லாமல் இருந்தது.  நுரையீரலில் நிமோனியாவும் பீடிக்கப்பட்டிருந்தது. எத்தனைக் கடுமையாகப் போராடியும் கடைசியில் அந்த ராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஹனுமந்தப்பாவின் சொந்த ஊரான கொப்படிலிருந்து அவருடைய குடும்பம் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டிருந்தது.

InCorpTaxAct
Suvidha

அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததால் அவர் எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோவில்களில் பிரார்த்தனைகள் நடைபெற்றன. பிரதமர் மோடி அந்த ராணுவ வீரர் சிகிச்சைப் பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சைப் பெறும் வீரரைப் பார்த்துவந்தார்.

50946350அவர் பிறந்த ஊரான ஹூப்ளி மற்றும் கர்நாடகக் கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருடைய சிறுநீரகம் பழுதாகியிருக்கிறது என்ற செய்தி வந்ததைத் தொடர்ந்து உ.பியைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவி தன்னுடைய சிறுநீரகத்தைத் தர முன்வந்தார். தேசமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு ராணுவ வீரரின் உயிரைக் கடைசிவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →