Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Siddaramaiah wants Ballet Papers, says ‘no EVM’s in General Election’.

By   /  December 17, 2017  /  Comments Off on Siddaramaiah wants Ballet Papers, says ‘no EVM’s in General Election’.

    Print       Email

எலெக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு எந்திரம் வேண்டாம்; வாக்குச்சீட்டு முறையை மறுபடியும் கொண்டு வாருங்கள்- தேர்தல் கமிஷனுக்கு சித்தராமய்யா கடிதம்.

 

InCorpTaxAct
Suvidha

 

 

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலம் ஓட்டுப் பதிவு இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓட்டுப் பதிவு எந்திரங்கள் மூலம் மோசடி நடைபெற்று வருவதாகவும், எந்தச் சின்னத்திற்கு அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்தில் மட்டுமே ஓட்டுகள் விழுவதாக எந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்றும் ஒரு சாரார் குறிப்பிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற பல தேர்தல்களில் பாஜக இப்படித்தான் வெற்றி பெற்று வருகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதாவது மின்னணு எந்திரத்தின் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைச் சின்னத்திற்கே ஓட்டு விழுவது மாதிரி வடிவமைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். உத்திரப்பிரதேச தேர்தலில் இது சம்பந்தமாய் தோற்றுப்போன பலபேர் வழக்குகள் போட்டிருக்கிறார்கள் என்றும் எல்லா வழக்குகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதற்கு தேர்தல் கமிஷனும் துணை போகிறது என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. ஆனால் தேர்தல் கமிஷன் இதனை மறுத்துள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு கர்நாடகத்திற்கு மாநிலத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் எலெக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு எந்திரம் வேண்டாம் என்றும் பழைய வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மாநில முதல்வர் சித்தராமய்யா கூறியிருக்கிறார்.

ராய்ச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபுணர்கள் சிலரிடம் பேசியதாகவும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என அவர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் சுயாட்சி பெற்ற அமைப்பாக இருந்தாலும் தேர்தல் ஆணையர்களை மத்திய அரசுதான் நியமிப்பதாக சித்தராமய்யா தெரிவித்துள்ளார். எந்திரங்களுக்கு பதில் வாக்குப்பதிவு சீட்டுக்கள் மூலமே தேர்தல் நடத்துவதற்கு ஆவன செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Shailesh Lakhtakia’s Journey

Read More →